பூலித்தேவருக்கு பிரதமர் மோடி புகழாரம்| Dinamalar

புதுடில்லி : சுதந்திர போராட்டவீரர் நெற்கட்டும் செவல் பாளையக்காரர் பூலித் தேவரின் 307 வது பிறந்த தினம் இன்று. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவர் மணிமண்டபத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

பிரதமர் புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்ட அறிக்கை: மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.