தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் பேத்தியும் – திமுக மாநில இளைஞரணி இணைச்செயலாளருமான பைந்தமிழ்பாரி – கீதா தம்பதியின் மகளான ஸ்ரீநிதிக்கும் பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான -மதியழகன் – விஜயா தம்பதியின் மகனுமான கெளசிக் தேவ் ஆகியோரது திருமண விழா கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.
தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இத்திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மணமக்கள் இருவரும் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,
கலைஞர் தான் பொங்கலூர் பழனிச்சாமியின் திருமணத்திற்கும் அவரது மகனது திருமணத்திற்கும் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். அவர் இருந்திருந்தால் இதனையும் தலைமையேற்று நடத்தி இருப்பார் – இன்று அவரிடத்தில் இருந்து நான் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.
பொங்கலூர் பழனிச்சாமி அவர் திருமணத்தை நடத்தி கொண்ட நேரத்தில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதன்பின் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். கழகத்திற்கு சோதனை வந்த நேரத்தில் இம்மாவட்டத்தில் கழக்கத்தை கம்பீரமாக நிலை நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு.
மதியழகன் நல்ல உழைப்பாளி அவரது வரவு கழகத்திற்கு வலு சேர்க்குமென கழக நிர்வாகிகள் கூறியது பொய்யாகவில்லை. இந்த திருமணத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் சீர் திருத்த திருமணமாகவும் சுய மரியாதை திருமணமாகவும் நடைபெற்றுள்ளது. தமிழ் திருமணமாக கலைஞர் செம்மொழி என பெயர் பெற்று தந்த தமிழ் மொழியில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
இது போன்ற சீர் திருத்த திருமணங்கள் 1967″க்கு முன் நடைபெற்றது என சொன்னால் அதை சட்டபடி அங்கீகாரம் பெற்றதாக அறிவிக்குக் அறிவிப்பை நாம் பெற்றிருக்கவில்லை, 1967″ல் திமுக வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சியில் இருந்த போது இதனை தீர்மானமாக நிறைவேற்றினார்.
இன்றைக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி 6வது முறையாக பொறுப்பேற்று சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 70% நிறைவேறி உள்ளது. மீதமுள்ள 30% விரைவில் நிறைவேற்றுவோம் என்பது உங்களுக்கு (மக்கள்) தெரியும். நான் கடந்த முறை கோவை வந்த போது மக்கள் பெரும் வரவேற்பளித்தனர். அப்போது சில மக்கள் மனுக்களை அளித்தனர்.
அதே சமயம் மனுக்களை ஏக்கத்தோடு தான் அளிப்பதை நான் பார்த்துள்ளேன் ஆனால் இப்போது என்னிடம் மனு அளிக்கும் போது மகிழ்ச்சியுடன் பூரிப்புடன் நம்பிக்கையுடன் அளித்தார்கள். மனு அளிக்கும் போது நன்றி என்ற வார்த்தையை குறிப்பிட்டு அளித்துள்ளனர். எனவே இந்த மனுவை அளிக்கும் போதே அது நிறைவேற்றப்படும் என நம்பிக்கை மக்களிடத்தில் வந்துள்ளது,
இது தான் திராவிட மாடல் ஆட்சி. சட்டமன்ற தேர்தலுக்கு முன் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்தை நான் நடத்திய போது பெறப்பட்ட மனுக்களில் 70% மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதற்கென தனி கட்டுப்பாட்டு அறையும் உள்ளது. அங்கும் நான் அடிக்கடி ஆய்வு மேற்கொள்வேன். அப்போது மனுதாரர்களிடத்திலும் நான் தொடர்பு கொண்டு பேசுவேன்.
அப்போது ஒரு தோழர் 10 ஆண்டுகளாக அலைந்தும் தனது கோரிக்கை நிறைவேற்றபடாமல் இருந்தபொழுது இந்த ஆட்சியில் 10 நாட்களில் அதற்கு தீர்வு கிடைத்ததாக என்னிடம் கூறினார். மேலும் அவர் என்னிடம் நாம் இருவரும் ஒன்றாக பிரசிடென்சி கல்லூரியில் ஒன்றாக படித்தவர் என்று கூறினார். அது எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது பிரச்சனைகளை முதல்வர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம் என உறுதிமொழி அளித்துள்ளதாகவும் அதை எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படும் இதுதான் திமுக இதுதான் திராவிட மாடல் ஆட்சி. என்று கூறிய அவர் ஜெயலலிதா”வின் மறைவு மர்மமாக உள்ளது என அவர்கள் கட்சியினுள்ளே கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஓ.பி.எஸ் அவர்களுக்குள் இருந்த பிரச்சனையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆவியோடு பேசுகிறேன் என்று அமர்ந்தார் தியானம் செய்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரே கூறினார். எனவே ஒரு ஒப்புக்காக ஒரு கமிஷனை அன்றைய முதலமைச்சர் எடப்பாடி அறிவித்தார். ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுக சாமியின் தலைமையில் அந்த கமிஷன் ஒரு ஒப்புக்காக செயல்பட்டு வந்தது.
அன்றே நேரத்தில் நாம் ஆட்சிக்கு வந்தால் அந்த கமிஷனை முறையாக நடத்துவோம் என்று கூறி இருந்தோம், தற்பொழுது ஐந்து வருட நாட்களுக்கு முன்னால் ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி அந்த அறிக்கையை எங்களிடத்தில் கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில் பல பிரச்சினைகள் உள்ளது அதனை தற்போது நான் கூறவில்லை சட்டமன்றத்திற்கு அது வரும். சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைத்து சட்டமன்றத்தின் மூலமாகவே முறையான நடவடிக்கையை எடுப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்.
மேலும் தூத்துக்குடி சம்பவமும் கடந்த ஆட்சியில் தான் நடந்தது அன்றைய முதல்வர் அதனை தொலைக்காட்சியில் பார்த்தது தான் தெரிந்து கொண்டேன் என கூறினார். அந்த அறிக்கையும் சட்டமன்றத்தில் வைக்க உள்ளோம். இன்றைக்கு ஈபிஎஸ் வாக்குறுதிகளின் நிறைவேற்றவில்லை என கூறி வருகிறார் ஆனால் அதனை நிறைவேற்றி வருவதற்கான எடுத்துக்காட்டுகளாக தான் நான் இதனை கூறியுள்ளேன்.
பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், பால் விலை பெட்ரோல் டீசல் விலை குறைப்பு ஆகியவற்றை செய்துள்ளோம். 5ம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஸ்மார்ட் கிளாஸ்யை துவக்கி வைக்க தமிழகம் வருகிறார்.
அன்றைய தினமே அரசு பள்ளிகளில் படித்து அரசு கல்லூரியில் சேர்கின்ற மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000″ரூபாய் வழங்கும் திட்டத்தையும் தொடங்க உள்ளேம். இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டமும் கூடிய விரைவில் வரும். நிதியை சரி செய்து கொண்டிருக்கிறோம் அதன் பின்பு நிச்சயமாக அதனையும் நிறைவேற்றுவோம். அதில் சந்தேகம் வேண்டாம் நான் கலைஞரிம் மகன். மணமக்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil