கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சரிவினைக் கண்டுள்ளது .
இது அமெரிக்காவின் மத்திய வங்கியானது பொருளாதாரத்தில் தாக்கம் இருந்தாலும், வட்டி விகிதத்தினை அதிகரிக்கும் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இதற்கிடையில் சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசி என பலவும் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் தேவையானது குறையலாம் என்ற நிலை இருந்து வருகின்றது.
இனி எண்ணெய்-க்கும், தங்கத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை..!!
தற்போதைய நிலவரம்?
இதற்கிடையில் தான் கச்சா எண்ணெய் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது WTI கச்சா எண்ணெய் விலையானது கிட்டத்தட்ட 1% குறைந்து, 88.89 டாலராக குறைந்துள்ளது. இது இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஃபண்டமெண்டல் காரணிகளும் எதிராக உள்ள நிலையில், டெக்னிக்கலாகவும் சரிவினைக் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
தேவை குறையலாம்
தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில் ரெசசன் வரலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் சீனாவில் நிலவி வரும் மந்த நிலை உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் தேவை சரியலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது.
முக்கிய காரணிகள்
குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியானது கடந்த வாரத்தில் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, மத்திய வங்கியானது தேவையான நடவடிக்கையினை எடுக்கும் என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் என்பது குறைந்தாலும், வளர்ச்சியில் சரிவு, தேவையில் கணிசமான தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபெக்கின் முடிவு என்ன?
எண்ணெய் வர்த்தகர்கள் தற்போது விலையை தொடர்ந்து கண்கானித்து வருகின்றது. லிபியா மற்றும் ஈராக்கில் குறிப்பிடத்தக்க பிரச்சனை இருந்த போதிலும், உற்பத்தியில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகின்றது. மேலும் ஈரான் அமெரிக்கா இடையான அணுசக்தி ஒப்பந்தம் மீண்டும் புதுபிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. அதோடு ரஷ்யாவிலும் முன்பை விட உற்பத்தி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறையுமா?
மொத்தத்தில் பல காராணிகளும் சந்தைக்கு சாதகமாக உள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலையானது சரியத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Crude oil prices fell on fears of a slowdown in growth
Crude oil prices fell on fears of a slowdown in growth/வீழ்ச்சி காணும் கச்சா எண்ணெய்.. 2020க்கு பிறகு தரமான சம்பவம்.. பெட்ரோல், டீசல் விலை குறையுமா?