வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான
கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி பேசியதாவது:
“
– எடப்பாடி பழனிசாமி இருவராலும் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் புகழேந்தி, அவர் இப்போது எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பது அவருக்கே தெரியாது. தற்போது
பக்கம் நின்றுக்கொண்டு அதிமுகவை விமர்சிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை.
பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். நீங்கள் ராஜினாமா செய்யத் தயாரா என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்பது ஒரு கட்சியின் தலைமை கழக பேச்சாளர் மேடையில் பேசுவது போல் உள்ளது. ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்தவர் பேசுவது போல் இல்லை. ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என்று அழைத்து விட்டு ஊரில் உள்ளவர்களை எல்லாம் கூட்டு சேர்க்கலாம் என்று பேசிவருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக என்ற இயக்கம் ஒரு தனிநபருக்கும் ஒரு குடும்ப கட்டுப்பாட்டுக்குள் சென்று விடக்கூடாது என்று கூறி தான் தர்மயுத்தம் நடத்தினீர்கள் நானும் உங்களுடன் நின்றேன். கட்சியில் சசிகலாவை சேர்க்கக்கூடாது என்று கூறியவர், இப்போது அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், எந்தவிதமான செல்வாக்கும் இல்லாதவர் ஓபிஎஸ், இன்று தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு மாற்றுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தான் இருக்கிறார். அதனால் தான் ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் கூட மறைமுகமாக பல்வேறு வகையில் ஓபிஎஸ்-க்கு உறுதுணையாக இருக்கிறார்.
மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள எடப்பாடி அரசியலில் உயர்ந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து கட்சிகளும் ஒருசாராராக உள்ளனர். 30, 40, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் சென்று விடுவார்கள் என்று ஆளுங்கட்சியினர் ஊடகங்கள் வாயிலாக பொய் பிரச்சாரங்கள் செய்து தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள்.
ஓபிஎஸ் உடன் இருக்கும் சில எம்எல்ஏக்கள் கூட இபிஎஸ் பக்கம் வர வாய்ப்புள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு செலவு செய்ய மனசு வராது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடிக்கு ஆதரவாக தான் உள்ளனர்” இவ்வாறு கூறினார்.
எடப்பாடி பழனிசாமி பணத்தை வாரி இறைத்து தான் நிர்வாகிகளை வளைத்து போட்டுள்ளதாக எதிர் அணியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு செலவு செய்யவே மனசு வராது என்று கே.பி முனுசாமி கூறியுள்ளது. இபிஎஸ் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.