பூலித்தேவர் பிறந்தநாள்: மோடி- ஸ்டாலின் வாழ்த்து

Puli thevar Birthday Tamil News: சுதந்திர போராட்ட வீரரும் மாமன்னருமான பூலித்தேவரின் 307-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுதும் விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது. இதனையொட்டி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மாமன்னர் பூலித்தேவரின் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ள நிலையில், அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், “சல்லிக்காசு தரமுடியாது” என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்! நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு! இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

கனிமொழி எம்.பி வாழ்த்து

தூத்துக்குடி திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், தேசப்பற்றின் அடையாளமாய் விடுதலைப் போரில் தெற்கிலிருந்து உயரப் பறந்த போர்க்கொடியை ஏந்தி நின்ற வீரர் பூலித்தேவர் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரின் அர்ப்பணிப்பை நினைவில் கொள்கிறேன். விடுதலைப் போரில் அவரின் பங்களிப்பை, வீரத்தைப் போற்றுவோம்!” என்று கூறியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை

மாமன்னர் பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, தி.நகரில் அவரது திருவுருவப் படத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஓபிஎஸ்-க்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

சுதந்திர போராட்ட வீரரும் மாமன்னருமான பூலித்தேவரின் 307-வது பிறந்தநாள் விழாவிற்கு, தேனியில் இருந்து தென்காசி மாவட்டம் நெற்கட்டான் செவலுக்கு செல்லும் வழியில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.