இன்னும் ஒரு சில நாட்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த நிலை மாடலான ஆப்பிள் ஐபோன் 14 வெளியாக உள்ளது. இந்நிலையில் வழக்கம் போல மொபைல் குறித்தும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் புது புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் மொபைல் காதலர்களை ஆச்சரிய படுத்தியுள்ளது.
பொதுவாகவே ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல்கள் வெளி வருவதற்கு முன்பு அதை பற்றி எந்த தகவல்களும் கசிந்து விட கூடாது என்பதில் கறாராக இருக்ககும். அதன் பாதுகாப்பு வளையமும் கூட அவ்வளவு வலுவானதாக இருக்கும்.
இருப்பினும் பல்வேறு நிபுணர்களின் கருத்துப்படி ஆப்பிள் ஐபோன் 14இல் குறிப்பிட்ட சிறப்பம்சங்கள் ஆப்பிள் ஐபோன் 14இல் இடம்பெறலாம் என்று ஏற்கனவே தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அதன் விலை குறித்து வெளியாகியுள்ள தகவல் இணைய உலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 14 இன் வரவையொட்டி அதன் முந்தைய மாடல் மொபைல்களான ஆப்பிள் ஐபோன் 13 , ஆப்பிள் ஐபோன் 11 மற்றும் ஆப்பிள் ஐபோன் SE போன்றவையின் விலை குறைந்துள்ளது.
எனவே வாடிக்கையாளர்களும் இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து அவற்றை வாங்கி வருகின்றனர். ஆனால் நிபுணர்களின் கருத்துப்படி ஐபோன் 13இன் விலையை விட ஐபோன்14 பேசிக் மாடலின் விலை குறைவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அந்த மாடல் ஐபோன் 13இன் அடுத்த நிலை என்பதால் அதை விட ஒரு சில மாறுபாடுகள் செய்தே விற்பனைக்கு வரும். ஆனாலும் இதன் விலை அதை விட குறைவாகவே இருக்கும் என்று நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் அவசரப்பட்டு யாரும் ஆப்பிள் ஐபோன் 13 மாடல் மொபைல்களை வாங்க வேண்டாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஆப்பிள் 13 மாடலின் உயர்ரக மாடல்களை விட ஆப்பிள் ஐபோன் 14இன் அடிப்படை மொபைல் விலை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே செப்டம்பர் 7 ஆப்பிள் ஐபோன் 14 வெளியீட்டிற்க்கு பிறகு எந்த மொபைல் வாங்குவது என்று முடிவெடுக்கலாம்.
– சுபாஷ் சந்திரபோஸ்