டெல்லி: இந்தியாவின் உற்பத்தி விகிதம் குறித்தான பி எம் ஐ தரவானது தொடர்ந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இது தொடர்ந்து நாட்டில் தேவையானது மீண்டு வருவதை காட்டுகின்றது. தொடர்ந்து நாட்டின் பணவீக்கம் குறைந்து வரும் நிலையில், சந்தையில் உள்ளீட்டு செலவினங்கள் குறைந்து வருகின்றது.
இதன் காரணமாக தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து சரிவடையத் தொடங்கியுள்ளது.
இந்தியா தொடந்து இதில் கவனம் செலுத்தணும்.. எதிர்காலத்திற்கு இது தான் நல்லது!
தொழிற்துறை வளர்ச்சி
குறிப்பாக சர்வதேச சந்தையில் கமாடிட்டி பொருட்களின் விலை மற்றும் எரிபொருட்களின் விலையானது குறைந்து வரும் நிலையில், தொழிற்துறையானது வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் தான் எஸ் & பி குளோபல் இந்தியாவின் உற்பத்தி குறித்தான பிஎம் ஐ தரவானது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 56.2 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இதே கடந்த ஜூலை மாதத்தில் 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 56.4 ஆக வளர்ச்சி கண்டு இருந்தது.
14வது மாதமாக தொடர்ந்து வளர்ச்சி
இது கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பார்க்கும்போது தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக வளர்ச்சியினை கண்டுள்ளது. தொடர்ந்து 14வது மாதமாக இந்தியாவின் செயல்பாட்டினை மேம்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் கட்டுப்பாடுகள் இல்லாததால், இந்திய உற்பத்தியாளர்கள் தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர்.
ஆர்டர்கள் அதிகரிப்பு
தொடர்ந்து உற்பத்தியும் அதிகரித்து வருகின்றது. ஆர்டர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக வலுவான செயல்திறன் என்பது தொடர்ந்து 4வது மாதமாக மேம்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்தியாவில் தேவையானது அதிகரித்து வருகின்றது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் உற்பத்தி விகிதமும் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றது.
செலவினங்கள் குறைவு
பணவீக்கம் குறையத் தொடங்கியுள்ளதால் தொடர்ந்து உற்பத்தி செலவினங்களை குறைத்துள்ளது. இது மேற்கொண்டு உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. எனினும் அதிக சரக்கு கட்டணம், ஊழியர்கள் சம்பளம், மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு என்பது உற்பத்தி துறைக்கு சவால்களாக உள்ளன.
சில்லறை பணவீக்க விகிதம்
சில்லறை பணவீக்க விகிதம் தொடர்பான விகிதமானது கடந்த ஜூலை மாதத்தில் ஐந்து மாதங்களில் இல்லாதளவுக்கு 6.71% ஆக குறைந்துள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது மாதமாக 7% மேலாக குறைந்துள்ளது. எனினும் இது தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இலக்கான 6% மேலாகவே இருந்து வருகின்றது. 2022 – 23ல் ரிசர்வ் வங்கி 6.7% ஆக இருக்கலாம் என்று கணித்துள்ளது.
india’s PMI manufacturing rate robust at 56.2
india’s PMI manufacturing rate robust at 56.2/இந்தியாவின் பிஎம்ஐ விகிதம் தொடர்ந்து வளர்ச்சி..என்ன காரணம் தெரியுமா?