சென்னை : கடந்த ஆண்டில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அதிகமான படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
இந்த ஆண்டு தமிழ் படங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அதிகமான படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
சிறப்பான எதிர்பார்ப்பை கொடுத்த படங்கள் சொதப்பியதும், எதிர்பார்க்காத படங்கள் சூப்பர் ஹிட்டானதும் இந்த ஆண்டில் நடைபெற்றது.
சிறப்பான படங்கள்
கோலிவுட்டில் சிறப்பான படங்கள் வாரந்தோறும் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளிலும் ஓடிடியிலும் மாறி மாறி படங்கள் ரிலீசாகி ரசிகர்களை சிறப்பான என்டர்டெயின் செய்து வருகின்றன. இதில் பெரிய ஹீரோக்கள் முதல் அறிமுக நாயகர்கள் வரை அனைவரது படங்களும் இடம்பெற்று வருகின்றன.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்கள்
இந்தப் படங்களில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய், அஜித் படங்கள் சொதப்பியதும் சாதாரண நடிகர்களின் படங்கள் சிறப்பான வசூலை பெற்றதும் நடந்தது. கார்த்தி உள்ளிட்டவர்கள் தங்களது படங்களை வெளியிட்டு நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றுள்ளனர்.
சூப்பர் ஹிட்டான விக்ரம் படம்
முன்னதாக இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக மாறியுள்ளது கமலின் விக்ரம் படம் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடர்ந்து 90 நாட்களை தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஓடிடியிலும் படம் ரிலீசான நிலையில் திரையரங்குகளிலும் வெற்றிமுகம் காட்டி வருகிறது.
கலவையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட்
மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல்வேட்டை நடத்தியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான விக்ரமின் கோப்ரா படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப் படுத்தவில்லை.
அதிகமான நீளம்
இந்தப் படத்தின் நீளம் அதிகம் அதனால்தான் ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் நீளத்தை 20 நிமிடங்கள் குறைக்கும் முடிவை படக்குழு எடுத்துள்ளது. ஆனால் படத்தின் திரைக்கதை ப்ளசாக அமையவில்லை என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
4வது இடத்தை பிடித்த கோப்ரா
ஆனாலும் இந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்களில் 4வது இடத்தை பிடித்துள்ளது கோப்ரா. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் சர்வதேச அளவில் 12 கோடி ரூபாயாக உள்ளது. இந்த வசூல் தொடர்ந்து அடுத்தடுதத நாட்களில் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிக முதல்நாள் வசூல் 2022 படங்கள்
இந்த ஆண்டில் இதுவரை வெளியாகியுள்ள படங்களில் முதல் நாள் கலெக்ஷனில் அதிகமாக வசூல் செய்துள்ள முதல் 10 தமிழ் படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல விஜய்தான் முன்னிலையில் காணப்படுகிறார். அவரது பீஸ்ட் படம் இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
முதலிடத்தை பிடித்த பீஸ்ட்
இரண்டாவது மூன்றாவது இடங்களை வலிமை, விக்ரம் படங்கள் பிடித்துள்ள நிலையில், முன்னதாக சொன்னபடி கோப்ரா படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை ஆர்ஆர்ஆர், டான், விருமன், கேஜிஎப் 2, திருச்சிற்றம்பலம், எதற்கும் துணிந்தவன் படங்கள் பிடித்துள்ளன.
தென்னிந்திய அளவில் அதிக வசூல் படங்கள்
தென்னிந்திய அளவில் மொத்த வசூல் குறித்த பட்டியலும் வெளியாகியுள்ளது. இதில் முதல் 8 இடங்களை பிடித்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 1256 கோடி ரூபாயை மொத்தமாக வசூலித்துள்ளது கேஜிஎப் 2 படம். தொடர்ந்து இந்தப் பட்டியலில் 1135 கோடி ரூபாய் வசூலித்து ஆர்ஆர்ஆர் படம் 2வது இடத்திலும் 418 கோடி ரூபாய் வசூலித்து விக்ரம் படம் 3வது இடத்திலும காணப்படுகிறது.
4வது இடத்தில் விஜய்யின் பீஸ்ட்
இந்த பட்டியலில் 226 கோடி ரூபாய்களை மட்டுமே ஒட்டுமொத்தமாக வசூலித்து விஜய்யின் பீஸ்ட் படம் 4வது இடத்தையே பிடித்துள்ளது. 5வது இடத்தில் விக்ராந்த் ரோணா படம் 214 கோடி ரூபாயுடன் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் வலிமை, சர்க்காரு வாரி பட்டா, ஜேம்ஸ் போன்ற உள்ளன.