மும்பை: நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.1993-இல் மும்பையில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமை, தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வரும் தாவுத் இப்ராகிம், பாகிஸ்தானில் கராச்சி நகரில் தலைமறைவாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சமும், அவரது கூட்டாளி சோட்டா ஷகீல் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் டைகர் மேமன், அனீஸ் இப்ராஹிம், ஜாவேத் சிக்னா ஆகியர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.