EPFO முக்கிய அறிவிப்பு..ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், தொடர்ந்து அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு சில அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது.

ஓய்வூதியதாரர்கள் பென்சனை பெற தங்களது ஆயுள் சான்றிதழை வருடா வருடம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இதனை மிக எளிதாக அஞ்சலகத்திலேயே பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை மூத்த குடி மக்கள் நலனுக்காக அவர்கள் வீடு தேடி சென்று சேவைகளை வழங்கும் வகையில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏன் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மக்களின் பெஸ்ட் சாய்ஸ்.. உங்களுக்கு தெரியுமா?

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

இந்த ஆயுள் சான்றிதழ் குறித்து தான் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் பல ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம், ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை வாழ் நாள் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

 ஆயுள் சான்றிதழ் கடைசி தேதி?

ஆயுள் சான்றிதழ் கடைசி தேதி?

இந்த ஆயுள் சான்றிதழ் வருடம் தோறும் நவம்பர் மாதத்திற்குள் சமர்பிக்கப்பட வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழ் ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாக உள்ளது. ஒரு வேளை சரியான சமயத்தில் ஆயுள் சான்றிதழை ஓய்வூதியதாரர் சமர்பிக்காவிட்டால், ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

இனி பிரச்சனை இல்லை
 

இனி பிரச்சனை இல்லை

ஆக இத்தகைய சிக்கலை தவிர்க்கத் தான் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன் படி, நீங்கள் வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆயுள் சான்றிதழை வழங்கலாம். இந்த சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு வருடத்திற்கு செல்லும் என தெரிவித்துள்ளது. ஆக அது முடிவடைவதற்குள் அடுத்த ஆண்டிற்கான சான்றிதழை வாங்கிக் கொள்ளலாம்.

எப்படி எங்கு பெறுவது?

எப்படி எங்கு பெறுவது?

இந்த ஆயுள் சான்றிதழை பிபிஓ நம்பர், ஆதார் கார்டு, வங்கி கணக்கு என் மற்றும் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டியிருக்கும். இதனை தற்போது அஞ்சலகங்கள், வங்கிகள், பொது சேவை மையங்கள், இபி எஃப் ஓ அலுவலகம், உமாங்க் ஆப் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

ஓய்வூதியதாரர்கள் பலன்

ஓய்வூதியதாரர்கள் பலன்

அரசின் இந்த அறிவிப்பினால் 73 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இறுதி காலம் வரையில் ஓய்வூதியம் பெற இது பயனுள்ளதாக இருக்கும். அதேபோல இதற்காக ஓய்வூதியதாரர்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. மாறாக அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த அங்கீகாரம் செய்து கொள்ளலாம் எனவும், இதன் மூலம் ஆயுள் சான்றிதழை இருக்கும் இடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

EPFO: pensioners can submit Life Certificate any time: how to do it?

EPFO: pensioners can submit Life Certificate any time: how to do it?/EPFO முக்கிய அறிவிப்பு..ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.