நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அளித்தால் ரூ.25 லட்சம் சன்மானம் – என்ஐஏ

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்த தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள், இந்தியாவில் செயல்படும் டி நிறுவனம் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதைப்பொருள்கள் மற்றும் கள்ளநோட்டுகளை கடத்தியது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தாவூத் சகோதரர் அனீஷ் இப்ராஹிம், அவரது கூட்டாளிகள் ஷகீல் ஷேக், சோட்டா ஷகீல், ஜாவேத் சிக்னா, டைகர் மேமன் ஆகியோர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 15 முதல் 25 லட்சம் ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.