ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து இன்று முதல் செப்டம்பர் தொடங்கி உள்ள நிலையில் இன்று முதல் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
செப்டம்பர் 1 முதல் கேஸ் விலை குறைவு, சுங்கக்கட்டணம் அதிகரிப்பு ஆகிய மாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு இந்தியரின் பொருளாதாரத்தில் சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முதல் ஏற்பட்டுள்ள ஐந்து முக்கிய மாற்றங்கள் என்னென்ன? அதனால் ஏற்படும் லாப நஷ்டங்கள் என்னென்ன? என்பதை தற்போது பார்ப்போம்.
டிசிபி வங்கி டூ ஆதித்யா பிர்லா பேஷன் வரை.. இந்த 5 பங்குகளை வாங்கி போடுங்க!
1. தேசிய ஓய்வூதியத் திட்டம்
செப்டம்பர் 1 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ்-க்கு கமிஷன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு PoP மூலம் மட்டுமே பதிவு மற்றும் இதர வசதிகள் செய்யப்படும். இன்று முதல் பிஓபிக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கமிஷன் வழங்கப்படும்.
2. சுங்கவரி உயர்வு
இன்று முதல் அதாவது செப்டம்பர் 1-ம் தேதி முதல் பல நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 28 சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்ந்துள்ளது. இன்று முதல் சுங்கக்கட்டணம் அனைத்து வகை வாகனங்களுக்கும் ஒரு கிமீக்கு 10 காசு முதல் 52 காசு வரை அதிகரித்துள்ளது. இதனால் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவாகும்.
3. வீடுகளின் விலை உயர்வு
செப்டம்பர் 1-ம் தேதி காசியாபாத் நில வட்ட விகிதம் அதிகரித்துள்ளதால், நீங்கள் ஒரு வீட்டை வாங்க விரும்பினால், அதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். மேலும் இன்று முதல் பல நகரங்களின் நில வட்ட விகிதம் வரும் ஆண்டுகளில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு KYCஐ புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 என நிர்ணயம் செய்து இருந்தது. எனவே இதுவரை உங்கள் KYCஐப் புதுப்பிக்கவில்லை என்றால், இன்று முதல் உங்கள் கணக்கு முடக்கப்படலாம். எனவே பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கை இயக்கும் போது பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
5. காப்பீட்டுக் கொள்கை
இன்று முதல் அதாவது செப்டம்பர் 1 முதல் உங்கள் காப்பீட்டின் பிரீமியம் குறைக்கப்படும். பொது காப்பீட்டு விதிகளில் ஐஆர்டிஏ செய்த மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இப்போது காப்பீட்டு முகவருக்கு 20% கமிஷன் மட்டுமே செலுத்த வேண்டும். IRDA செய்த மாற்றங்களுக்குப் பிறகு பிரீமியம் குறைக்கப்படும்.
5 big changes in September 2022 that will directly impact your finances
5 big changes in September 2022 that will directly impact your finances | செப்டம்பர் 1 முதல் ஐந்து முக்கிய மாற்றங்கள்.. லாபமா? நஷ்டமா?