வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சமும், தாவூத் இப்ராஹிம் கூட்டாளியான சோட்டா ஷகில் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 20 லட்சமும், அனீஸ் இப்ராஹிம், ஜாவேத் சிக்னா, டைகர் மேமன் ஆகியோரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சம் சன்மானமும் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
தேசிய புலனாய்வு முகமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் குவைதா ஆகியவற்றுடன் நெருங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாவூத் இப்ராஹிம் பற்றி பேசிய இந்தியா, 1993 மும்பை குண்டு வெடிப்பிற்கு காரணமாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் மற்றும் ஐ.நா.வால் பயங்கர தீவிரவாதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பலரும் அண்டை நாட்டால் ஆதரித்து பாதுகாக்கப்படுகின்றனர் என்று பாகிஸ்தானின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடாமல் குற்றஞ்சாட்டியுள்ளது.
தாவூத் இப்ராஹிமை கைது செய்வதில் சர்வதேச ஒத்துழைப்பை நாடுகிறோம் என்றும் இந்திய தெரிவித்திருந்தது. 1993ல் இருந்து 2022 வரை இந்தியாவால் தொடர்ந்து தேடப்படும் குற்றவாளியாக தாவூத் இப்ராஹிம் இருக்கிறார்.
தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சமும், தாவூத் இப்ராஹிம் கூட்டாளியான சோட்டா ஷகில் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 20 லட்சமும், அனீஸ் இப்ராஹிம், ஜாவேத் சிக்னா, டைகர் மேமன் ஆகியோரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சம் சன்மானமும் வழங்கப்படும் இவ்வாறு அந்த அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement