பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 90 வயது முதியவருக்கு 3 ஆண்டு சிறை

பாலக்காடு: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 90 வயது முதியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி பட்டாம்பி விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்லடிக்கோடு அருகே உள்ள கரிம்பா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கோராகுரியன் (90). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக பாலக்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை பட்டாம்பி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி சதீஷ்குமார், குற்றம்சாட்டப்பட்ட முதியவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.