சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவருக்கு ஜனாதிபதி புடின் மலர் அஞ்சலி…வீடியோ காட்சிகள்


மைக்கேல் கோர்பச்சேவிற்கு மலர்வளையம் வைத்து புடின் அஞ்சலி.


ஜனாதிபதி புடினின் பணிச் சுமை காரணமாக இறுதி சடங்கில் பங்கேற்க மாட்டார் என தகவல்.

சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் மைக்கேல் கோர்பச்சேவின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

சோவியத் யூனியன் ஒன்றியத்தின் கடைசி தலைவரும், 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவருமான மைக்கேல் கோர்பச்சேவ் கடந்த செவ்வாய்கிழமை மாஸ்கோவில் உள்ள மத்திய மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மைக்கேல் கோர்பச்சேவின் இறப்பிற்கு ரஷ்ய தலைவர்கள் மற்றும் உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், இந்த விழாவில் அரசு இறுதிச் சடங்கின் பங்களிப்புகள் இருக்கும், இதில் மரியாதைக்குரிய காவலர் பணிகளும் அடங்கும், மேலும் அரசாங்கம் இறுதி சடங்கு அமைப்புக்கு உதவி செய்யும் என தெரிவித்தார்.

அத்துடன் கோர்பச்சேவ் இறந்த மாஸ்கோவில் உள்ள மத்திய மருத்துவமனைக்கு வியாழன் காலை சென்று மலர்வளையம் வைத்து ஜனாதிபதி புடின் மரியாதை செலுத்தியதாக பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வாறாயினும், மைக்கேல் கோர்பச்சேவின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவருக்கு ஜனாதிபதி புடின் மலர் அஞ்சலி...வீடியோ காட்சிகள் | Putin Will Not Attend Mikhail Gorbachevs Funeral

சோவியத்தின் கடைசி தலைவர் மைக்கேல் கோர்பச்சேவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்கு துரதிர்ஷ்டவசமாக ஜனாதிபதியின் பணி அட்டவணை செப்டம்பர் 3 ம் திகதி வரை அனுமதிக்காது, எனவே மருத்துவமனைக்கு வியாழன்கிழமை சென்று புடின் இறுதி மரியாதை செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

மைக்கேல் கோர்பச்சேவ் குறித்து ஜனாதிபதி புடின் வெளியிட்ட அறிக்கையில், கோர்பச்சேவ் சிக்கலான, வியத்தகு மாற்றங்கள், பெரிய அளவிலான வெளியுறவுக் கொள்கை, பொருளாதார மற்றும் சமூக சவால்கள் ஆகியவற்றின் போது நம் நாட்டை வழிநடத்தினார்.

சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவருக்கு ஜனாதிபதி புடின் மலர் அஞ்சலி...வீடியோ காட்சிகள் | Putin Will Not Attend Mikhail Gorbachevs Funeral

சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை அவர் ஆழமாகப் புரிந்துகொண்டவர், அவசரப் பிரச்சினைகளுக்கு அவர் தனது சொந்த தீர்வுகளை வழங்க முயன்றார்.

கூடுதல் செய்திகளுக்கு: உலகின் மிகப் பெரிய கப்பல்…முதல் பயணத்திற்கு முன்பே ஸ்கிராப்பிற்கு விற்பனை!

91 வயதில் இறப்பதற்கு முந்தைய ஆண்டுகளில் திரு கோர்பச்சேவ் மேற்கொண்ட சிறந்த மனிதாபிமான, தொண்டு, கல்வி நடவடிக்கைகள் பற்றியும் திரு புடின் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.