பிரித்தானியாவில் இரண்டு வாரங்களுக்கு பால் விநியோகத்தைத் தடுக்க வீகன் ஆர்வலர்கள் குழு திட்டமிட்டுள்ளதாக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது நடந்தால் கடுமையான விலையேற்றம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
தாவர அடிப்படையிலான பால் மாற்றுகளுக்கு மாறக் கோரி, சைவ உணவுகளை மட்டுமே உண்ணக்கூடிய வீகன் குழு பிரித்தானியாவில் பால் விநியோகத்தைத் தடுத்துவைக்க திட்டமிட்டுள்ளதாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் பால் கிடங்குகளை முடக்கும் திட்டத்தில் 500 வீகன் ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
Animal Rebellion எனப்படும் அந்த எதிர்ப்புக் குழு, இது அழிவுக் கிளர்ச்சியின் ஒரு பகுதியாகும், இந்த நடவடிக்கையின் மூலம் அதன் சைவ உணவு பழக்கத்தை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.
அகிம்சையின்றி என்ன வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருப்பதாகவும், சிறைக்கு செல்லவும் தாயாராக இருப்பதாகவும் அந்த குழு எச்சரித்துள்ளது.
அவர்களால் பால் விநியோகத்தை வெற்றிகரமாகத் தடுக்க முடிந்தால், அது நாடு முழுவதும் பால் பற்றாக்குறை மற்றும் விண்ணை முட்டும் விலைக்கு வழிவகுக்கும்.
இது குறித்து Arla Foods UK-வை சேர்ந்த ஆஷ் அமிரஹ்மதி கூறுகையில், இது வாடிக்கையாளர்களுக்குச் செலவுகளைச் சேர்க்கும், இதனால், விநியோகம் தடைபடாமல் இருக்க காவல்துறை மற்றும் அரசின் உதவியை நாடியுள்ளதாக கூறியுள்ளார்.
சைவ உணவு உண்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தீவிர முயற்சி எடுப்பது இது முதல் நிகழ்வு அல்ல.
#Vegans turn on #animal rights activists after they tipped milk all over floor in bizarre anti-dairy protest at #London‘s poshest food hall Harrods pic.twitter.com/9ZRxHpcBIv
— Hans Solo (@thandojo) August 10, 2022
கடந்த மாதம், Animal Rebellion-ன் ஆர்வலர்கள் நைட்ஸ்பிரிட்ஜில் உள்ள Harrods டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குச் சென்று, தரை முழுவதும் பாலை ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
ஜூலை 27 அன்று நடந்த போராட்டத்தின் வீடியோவில், வீகன் குழு ஒன்று ஹரோட்ஸில் உள்ள உணவு கூடத்தின் பால் பகுதிக்கு நடந்து சென்று அட்டைப்பெட்டிகளில் இருந்து பாலை தரையில் ஊற்றுவதைக் காணலாம்.