இந்திய விமானப்படை வசமுள்ள சினூக் ஹெலிகாப்டர்கள் நல்ல நிலையில் உள்ளன – போயிங் இந்தியா

இந்திய விமானப்படையில் உள்ள 15 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் மிகவும் நல்ல நிலையில் உள்ளதாகவும், அவற்றில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் போயிங் இந்தியா நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

என்ஜின்களில் தீ விபத்து ஏற்பட்டதால் தன்னிடமுள்ள 400 சி எச் – 47 சினூக் ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்த அமெரிக்க ராணுவம் தடைவிதித்தது.

இந்திய விமானப்படையிடமும் இதுபோன்ற 15 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் உள்ளதால், இது குறித்து இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்த போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.