எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக்கூடிய "லிவிங் டுகெதர்” உறவுமுறை..! – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவலை..!

“லிவிங் டுகெதர்” உறவுமுறை குறித்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் கவலையை தெரிவித்து உள்ளனர். கேரள மாநிலத்தில் ஆலப்புழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவாகரத்து கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் முகமது முஸ்தாக் மற்றும் சோபி தாமஸ் அகர்வால் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது விவாரகத்து கேட்டு இளைஞர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிபதிகள், பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் கலாசாரம் திருமணங்களை பாதித்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர். எப்போது வேண்டுமானாலும் பிரிந்துசெல்லக்கூடிய லிவிங் டுகெதர் உறவுமுறை அதிகரித்து வருவதாகவும், புதிய தலைமுறையினர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு திருமணத்தை தடையாக பார்க்கின்றனர் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் அதிகரிப்பு சமூகத்தை பாதிக்கும் என்ற நீதிபதிகள், கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் கேரளா, ஒருகாலத்தில் வலுவான குடும்ப உறவுகளை கொண்டிருந்ததாகவும், பலவீனம் மற்றும் சுயநலம் போன்றவற்றால் திருமண உறவுகள் உடைவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இந்த நிலை தொடர்வது நல்லதல்ல என்றும் அதனால் இந்த மனுவை நிரகரிபதாகவும் கூறினர்.
மேலை நாட்டு மோகத்தில் பெருகி வரும் இந்த லிவிங் டுகெதர் கலாச்சாரம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தான நீதிபதிகளின் கருத்தும் பேசு பொருள் ஆகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.