புதிய வகை கொரோனா தொற்று தலைதூக்கியுள்ளதால் சீனாவில் 1 கோடியே 60 லட்சம் பேர் வசிக்கும் செங்டு நகரம் இன்று முதல் மூடப்படுகிறது.
அந்நகரில் 147 பேருக்கு புதிய வகை தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டிற்கு ஒருவர் அதாவது கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு இல்லாத ஒரு நபர் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.