தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கி விவசாயி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் மல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அன்பரசன். அவரது வயலில் நடவு வேலைகளில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்களுக்கு மதிய உணவு வாங்கிக் கொண்டு சென்றுள்ளார் அன்பரசன்.
அப்போது, இடி மின்னலுடன் பெய்த மழையின் காரணமாக வயல் வரப்பில் நடந்து செல்லும் வழியிலேயே மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அன்பரசன் உயிரிழந்தார்.
அதேபோல் செந்துறை அருகே உள்ள தளவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி மாலைமணி. இவர், ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் இவர்கள் இரண்டு பேரும் ஈச்சங்காடு ஏரிக்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென மின்னல் தாக்கியதில் மாலைமணி சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பலியானார்.