போர்ச்சுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
போர்ச்சுகலில் இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் லிஸ்பனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு பேறுகால பிரிவில் படுக்கை வசதி இல்லாததால், மற்றொரு மருத்துவமனைக்கு அவரை மாற்றும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்நாட்டில், பணியாளர் பற்றாக்குறை போன்றவற்றால் அவசரகால மகப்பேறு சேவைகளை தற்காலிகமாக மூடுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மார்த்தா தெமிடோ அறிவித்திருந்தார்.
இதனால், பல மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்தியப் பெண் மரணமடைந்த சில மணி நேரத்தில் தெமிடா பதவி விலகினார்.