தமிழகத்தில் போதைப்பொருள் அதிக அளவில் பரவியதற்கு, பிரதமரின் சொந்த மாநிலமே காரணம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது,
மத்திய அரசால் தான் போதை பொருள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் நடமாட்டம் இருக்கிறது. மத்திய அரசு இதுவரை போதைப் பொருள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால்தான் தமிழகத்தில் போதை பொருள் இந்த அளவு அதிகமாக பரவி உள்ளது.
இதையும் படியுங்கள்: அண்ணாமலை- கார்த்தி சிதம்பரம் இணைந்து செல்ஃபி: ஒரே விமானத்தில் பயணம்
குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள்கள் இந்தியாவுக்குள் வருகின்றன. தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் வழியாகவே போதைப்பொருள் கடத்தல் நடைபெற்று வருகிறது. குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் மட்டும் ஏராளமான போதைப்பொருள்கள் பிடிபட்டுள்ளன. விஜயவாடா துறைமுகத்திலும் அதிக அளவு போதைப் பொருள் கடத்தல் நடப்பதால், தமிழகத்தில் போதைப் பொருள் அதிகரிக்க காரணமாக உள்ளது. விஜயவாடாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு இதில் தொடர்பு இருப்பதாக சந்தேக்கிப்படுகிறது.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மற்ற மாநிலங்கள், நாடுகளில் இருந்து தான் தமிழகத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசு போதை பொருட்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக உள்ளது. துறைமுகங்களை தனியாருக்கு விடாமல், அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து தான் அதிக அளவில் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் வருகின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இந்தியாவிற்குள் போதைப்பொருள் கடத்தி வருவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதி ஒருவரே அந்த மாநிலத்தில் குஜராத் போதைப்பொருள் விற்பனை அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். விற்பனையை தடுக்க முந்தரா துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்துமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
போதைப் பொருள்களை தடுத்த நிறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இருப்பினும் மத்திய அரசு இதுவரை போதைப் பொருள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால்தான் தமிழகத்தில் போதைப் பொருள் அதிக அளவில் பரவி வருகிறது.
தமிழக அரசின் நடவடிக்கைகளால் ஒரே ஆண்டில் 152 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.2.88 கோடி மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தி.மு.க ஆட்சியில் ஒரே ஆண்டில் ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மூலம் போதைப்பொருள்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களிடம் போதைப்பொருள்களை பயன்படுத்த மாட்டோம் என
அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தி.மு.க.,வின் நிலைப்பாடு. மதவெறியை தூண்டி விடுபவர்கள் பா.ஜ.க.,வினர் தான். எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல தி.மு.க. இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil