ஊசிப்புழுவால் வயிறு வலிக்குதா? இதனை போக்க சில எளிய வழிகள் இதோ


பெரும்பாலும் குழந்தைகளிடம் அதிகம் காணப்படும் ஒரு பிரச்சினையாக குடல் புழுக்கள் உள்ளன.

இது வயிற்றில் குடலில் இருக்கும் ஊசிப்புழுக்களுக்கு நிவாரணம் அளிக்கவில்லையெனில் அது முள்புழுக்கள் அதிகரிக்க கூடும்.

இது தொற்றக்கூடியவை.

எனவே இவற்றை முடிந்தவரை நீக்குவது நல்லது. 

தற்போது ஊசிப்புழுக்களை வெளியேற்ற உதவும் வீட்டு வைத்தியங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஊசிப்புழுவால் வயிறு வலிக்குதா? இதனை போக்க சில எளிய வழிகள் இதோ | How To Get Rid Of Pinworms Naturally

  • 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து தேன் சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும். தினசரி 2 வேளை குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
  • 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
  • ஒன்று அல்லது 2 பூண்டு எடுத்து அதில் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து ஊற வைத்து இடித்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் ஆசன வாய் பகுதியில் தினசரி இரவு தடவி வர வேண்டும். தினமும் இரவு படுக்கையில் தடவி வந்தால் புழுக்கள் மலத்தில் வெளியேறும்.

  • ஊசிப்புழுக்களால் பாதிக்கப்பட்டால் ஆடைகளை கூட வெந்நீர் பயன்படுத்தி துவையுங்கள். நீங்கள் பயன்படுத்தும் அனைத்துப் பாத்திரங்களையும் சுடு நீரால் நன்கு கழுவ வேண்டும். கழிப்பறையை தினமும் வெந்நீர் மற்றும் சோப்புடன் சுத்தம் செய்வதன் மூலம் கிருமி நீக்கம் போல் வெளியேற்றி விடலாம்.

  • கிராம்புத் தைலம் – கிராம்புத் தைலம் ஆன்டி செப்டிக் மருந்தாகும். இது குடல் புழுக்களை அழிக்க உதவும். 2 சொட்டு கிராம்புத் தைலத்தை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பயன்படுத்தலாம். இதுவும் மலம் வழியாக புழுக்களை வெளியேற்றும்.

  • 200 மில்லி ஆரஞ்சுப் பழ விதை சாற்றை எடுத்துக் கொண்டு அதை வாரம் 2 முறை குடிக்கவும்.

  • பாதி எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை சாறு பிழிந்து தண்ணீரில் கலக்க வேண்டும். தேவைப்பட்டால் தேன் கலந்து இதை குடிக்கலாம். தினசரி ஒரு முறை இதை செய்து வர பலன் கிடைக்கும்.

  • அன்னாசிப்பழத்தை சாறாக்கி இனிப்பு சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம்.

  • கேரட்டை நறுக்கி தண்ணீரில் கலந்து அடித்து சாறாக்கி குடிக்கலாம். அல்லது சாலட் போன்று துருவி தயிர் சேர்த்து கலந்து சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 2 முறை வரை இதை சாப்பிடலாம்.

  • 2 சின்ன பாகற்காய்களை எடுத்து நறுக்கி தண்ணீரில் போட்டு மிக்ஸியில் அடித்து எடுக்கவும். அதில் தேன் கலந்தும் குடிக்கலாம். குழந்தைகளுக்கு பொரியல் வடிவில் சற்று இனிப்பு சேர்த்து மொறுமொறுப்பாக கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள்.

  • காலை கழிப்பறை செல்வதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெயை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் புழுக்கள் மலம் வழியாக வெளியேறிவிடும்.

      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.