விசாரணைக்கு சென்ற காவலரின் கையை கடித்த பெண் கைது..!

சென்னை திருவொற்றியூரில் காதல் தகராறு தொடர்பான விசாரணைக்கு சென்ற காவலரின் கையை கடித்ததாக பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வியும், வங்கி ஊழியர் ரேவேந்திரகுமாரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு முன்பே வரதட்சனை கேட்டு கிடைக்காததால் ரேவேந்திரகுமார் திருமணத்தை நிறுத்தி உள்ளார்.

இதனால் அவரது வீட்டிற்கு சென்று காதலி செல்வி தகராறில் ஈடுபட்டுள்ளார். புகாரின் பேரில் அங்கு விசாரிக்கசென்ற தலைமை காவலர் சரவணனின் செல்போனை பிடுங்கிய செல்வி, சட்டை பட்டனை கிழித்ததோடு அவரது கையையும் கடித்துவைத்ததாக கூறப்படுகின்றது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.