இந்தியா விமானப் போக்குவரத்து சேவையில் மத்திய அரசு விதித்து இருந்த கட்டண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் விருப்பம் போல் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் வாய்ப்பு உருவாகியிருக்கும் காரணத்தால் போட்டியும் கடுமையாக அதிகரித்துள்ளது.
வேகமாக இயங்க வேண்டிய இந்த நேரத்தில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் 2 மாதங்களாகத் தொடர்ந்து சம்பளம் தாமதமாக வருகிறது எனப் புலம்பி வருகின்றனர்.
வீட்டுக்கே வரும் ஸ்பைஸ்ஜெட் டாக்சி சேவை… அசத்தல் அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி!
ஸ்பைஸ்ஜெட்
இந்தியாவின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தனது ஊழியர்களுக்கு graded format அடிப்படையில் சம்பளம் அளிப்பதாகக் கூறப்பட்டாலும், தொடர்ந்து 2வது மாதமாகச் சம்பளத்தைத் தாமதமாக வழங்கி வருவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பார்ம்-16
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பிளைட் க்ரூ உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஜூலை மாதத்திற்கான சம்பளத்தைத் தாமதமாக வழங்கியது. இதேபோல் இன்னும் பல ஊழியர்களுக்கு 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பார்ம்-16 அளிக்காமல் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் உள்ளது என ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.
சம்பள குறைப்பு
கொரோனா தொற்றுக் காலத்தில் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்ட நிலையில் அது இன்னும் உயர்த்தப்படாமல் இருக்கும் வேளையில் ஜூலை மாதத்தில் இருந்து 2வது மாதமாகச் சம்பளம் ஊழியர்களுக்குத் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது.
50 சதவீதம்
தற்போது ஸ்பைஸ்ஜெட் தனது கேப்டன் மற்றும் பர்ஸ்ட் ஆபிசர்களுக்கு வழங்கும் சம்பளம் கொரோனாவுக்கு முந்தைய அளவில் 50 சதவீதம் கூட இல்லை என்பது முக்கியமான பிரச்சனையாக உள்ளது என்று ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் புலம்புகின்றனர்.
ஸ்பைஸ்ஜெட் விளக்கம்
இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் இன்று முதல் ஊழியர்களுக்கான சம்பளம் அவர்களது சம்பள கணக்கில் கிரெடிட் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கான விளக்கத்தை ஸ்பைஸ்ஜெட் புதன்கிழமை ஊழியர்களுக்குத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
SpiceJet employees frustrated with delays salaries for a 2nd month
SpiceJet employees are frustrated with delays in salaries for a 2nd month எப்ப சார் சம்பளம் போடுவீங்க.. ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் புலம்பல்..!