எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமிழக அரசைக் கண்டித்தும், அமைச்சரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
சேலம் – சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் வலுத்து வருவதை கருதி அதிமுக அரசு இந்த திட்டத்தை நிறுத்தி வைத்தது..
மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எட்டு வழி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதால் விவசாயிகள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த நிலையில் 8 வழிச்சாலை திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசும் இசைவு தெரிவித்துள்ளதால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பூலாவரியில் ஒன்று கூடிய விவசாயிகள் கால்நடைகளுடன் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமிழக அரசைக் கண்டித்தும், அமைச்சரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.