சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் புதன்கிழமை வெளியான படம் கோப்ரா.
3 மணி நேரம் 3 நிமிடங்கள் மற்றும் 3 நொடிகள் என ஃபேன்சி நம்பர் போல இருந்த அதன் நீளத்தை பார்த்தே ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
படம் சொதப்பிவிடுமோ என்கிற பயத்துடனே கோப்ரா பார்க்க சென்ற ரசிகர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் படுத்து தூங்கியே விட்டதாக ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
கடுமையான விமர்சனங்கள்
இந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு பிறகு கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட படம் என்றால் அது சியான் விக்ரமின் கோப்ரா படம் தான். விக்ரமின் கடுமையான உழைப்பை இயக்குநர் அஜய் ஞானமுத்து வீணடித்து விட்டாரே என ஏகப்பட்ட ரசிகர்கள் படத்தின் இயக்குநரை கண்டபடி திட்டி கடுமையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
அதிரடி குறைப்பு
நேற்றே படத்தின் நீளம் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலை செய்தியாக போட்டு இருந்தோம். அவ்வளவு நேரம் குறைப்பார்களா? ஏற்கனவே 3 மணி நேரம் படம் போட்டே புரியவில்லை எனும் ரசிகர்களுக்கு கட் செய்தால் மேலும், புரியாமல் போய் விடுமோ என்கிற சந்தேகங்களும் கிளம்பின.
20 நிமிடங்கள் கட்
இந்நிலையில், 20 நிமிடங்கள் படத்தின் நீளத்தை குறைப்பதாக செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ரசிகர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இப்படியொரு பெரிய முடிவை எடுத்துள்ளது. படத்தின் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் லேக் அடிக்கும் காட்சிகளை நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எப்போது
குறைக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இன்று மாலை முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகும் என்றும் தியேட்டரில் வந்து படத்தை பார்த்து கோப்ரா டீமுக்கு சப்போர்ட் செய்யுங்கள் என தயாரிப்பு தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தும் இதை முன்னாடியே பண்ணியிருக்கலாம் என்றும் கமெண்ட்டுகள் போட்டு வருகின்றனர்.
எடிட்டிங் டேபிள்லயே செஞ்சிருந்தா
இதை எடிட்டிங் டேபிள்லயே செஞ்சிருந்தா இன்னேரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும். இடைவேளை காட்சி ட்விஸ்ட், போலீஸ் ஸ்டேஷன் காட்சி இலுஷன் சீன்லாம் வேறலெவல்ல இருந்துச்சு ஒரே நாளில் மாற்றியதற்கு நன்றி இந்த வாரம் முழுக்க படம் ஓடினாலும் கலெக்ஷன் அள்ளிடும் என நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.