வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை.. NSO வெளியிட்ட ரிப்போர்ட்..!

ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து உலக நாடுகளில் கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொண்டு வேலைவாய்ப்பு சந்தை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆனால் இந்தியாவில் நிலைமை சற்று வித்தியாசமாக இருந்தது என்றால் ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு தான் இந்தியா ரஷ்யா உடனான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வந்தது, குறிப்பாகக் கச்சா எண்ணெய்-ஐ தள்ளுபடி விலையில் பல கப்பல்களில் வாங்கியுள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் சந்தையில் வெளிப்படும் என்பதை மறுக்க முடியாது.

கடந்த ஆண்டு ஏப்ரல் – ஜூன் மாதம் வேலைவாய்ப்பின்மை அளவுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு சிறப்பான வளர்ச்சி பதிவாகியுள்ளது.

உள்ளூர் மக்களுக்கு 7,50,000 வேலைவாய்ப்பு: கர்நாடக அமைச்சரவை அதிரடி திட்டம்!

வேலைவாய்ப்பின்மை விகிதம்

வேலைவாய்ப்பின்மை விகிதம்

நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஆண்டு 12.6 சதவீதமாக இருந்த நிலையில் 2022 ஏப்ரல்-ஜூன் காலத்தில் 7.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டு

ஏப்ரல்-ஜூன் காலாண்டு

வேலைவாய்ப்பின்மை விகிதம் என்பது 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் இருப்போரின் அளவுகளைக் குறிக்கிறது. ஏப்ரல்-ஜூன் 2021 இல் வேலைவாய்ப்பின்மை அளவு அதிகமாக இருந்தது, குறிப்பாகக் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகள் பல துறைகளில் வேலைவாய்ப்பைப் பாதித்தது.

நகரப்புற வேலைவாய்ப்பின்மை
 

நகரப்புற வேலைவாய்ப்பின்மை

இந்திய சந்தையில் 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதை உணர்த்தும் வகையில், தற்போது ஜூன் காலாண்டில் நகரப்புற வேலைவாய்ப்பின்மை அளவுகள் 12.6 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக உள்ளது. 2022ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டில் இதன் அளவு 8.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊரக வளர்ச்சி

ஊரக வளர்ச்சி

கொரோனா தொற்றுக் காலத்தில் ஊரக வளர்ச்சி சிறப்பாக இருந்த நிலையில் நகரப்புறத்தில் தான் மந்தமாக இருந்தது. இதில் வேலைவாய்ப்பு சந்தையும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.28 சதவீதமாக உள்ளது, இது நகரங்களில் 9.57 சதவீதமாகவும், ஊரகப் பகுதிகளில் 7.68 சதவீதமாகவும் உள்ளது.

 ஆகஸ்ட் மாத தரவுகள்

ஆகஸ்ட் மாத தரவுகள்

ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாநிலத்தில் எவ்வளவு வேலைவாய்ப்பின்மை உள்ளது.

  • ஹரியானா – 37.3%
  • ஜம்மு & காஷ்மீர் – 32.8%
  • ராஜஸ்தான் – 31.4%
  • ஜார்கண்ட் – 17.3%
  • திரிபுரா – 16.3%
  • கோவா – 13.7%
  • பீகார் – 12.8%
  • டெல்லி – 8.2%
  • பஞ்சாப் – 7.4%
  • மேற்கு வங்காளம் – 7.4%
  • ஹிமாச்சல பிரதேசம் – 7.3%
  • தமிழ்நாடு – 7.2%
  • தெலுங்கானா – 6.9%
  • கேரளா – 6.1%
  • ஆந்திரப் பிரதேசம் – 6%
  • புதுச்சேரி – 5.2%
  • உத்தரப்பிரதேசம் – 3.9%
  • கர்நாடகா – 3.5%
  • குஜராத் – 2.6%
  • மத்திய பிரதேசம் – 2.6%
  • ஒடிசா – 2.6%
  • மகாராஷ்டிரா – 2.2%
  • மேகாலயா – 2%
  • சத்தீஸ்கர் – 0.4%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Unemployment rate falls to 7.6 percent Q1 FY2022-23 says NSO data

Unemployment rate falls to 7.6 percent Q1 FY2022-23 says NSO data வேலைவாய்ப்புக்குப் பஞ்சம் இல்லை.. NSO வெளியிட்ட ரிப்போர்ட்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.