அவசர அழைப்பு… ஒரு மணி நேரம் பேசப் போகும் மோடி- பரபரப்பில் கர்நாடக பாஜக!

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று மங்களூரு செல்கிறார். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கர்நாடக மாநில மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

இந்த சூழலில் பாஜக நிர்வாகிகள் உடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் 17 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வழக்கமாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் போது கட்சி ரீதியான விஷயங்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் தர மாட்டார். இரண்டையும் தனித்தனியாக கையாண்டு வந்த சூழலில், மங்களூருவில் இப்படியொரு அதிரடியை கட்சியினர் யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கர்நாடக பாஜகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அடுத்த 8 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.