பிரியாமணியை வெளியே அனுப்பிவிட்டு அறிவுரை கூறிய அமீர்… மிரண்டு போன கார்த்தி

சென்னை: நடிகர் கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அடுத்ததாக இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய முதல் படமான பருத்திவீரனில் நடிக்கும்போது அமீர் கூறிய ஒரு விஷயத்தைப் பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

பருத்திவீரன்

அமெரிக்காவில் படித்து முடித்த கார்த்தி சென்னை திரும்பியதும் மணிரத்தினம் அவர்களிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தார். பல்வேறு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கார்த்தியை நடிக்கச் சொல்லி அணுகிய போது கார்த்தி அதனை தவிர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிகர் சிவகுமார் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் கொடுத்த அறிவுரையின் காரணமாக பருத்திவீரனில் நடிக்க முடிவெடுத்து மணிரத்தினம் அவர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் பின்னரே நடிகனாக மாறினார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் விதத்தில் அவருடைய நடிப்பு இருந்தது.

 பெங்களூரு பிரியாமணி

பெங்களூரு பிரியாமணி

படத்தின் கதாநாயகன் கார்த்தியாவது சென்னையில் வளர்ந்தவர். ஆனால் கதாநாயகியாக நடித்த பிரியாமணியோ பெங்களூரில் வளர்ந்த பெண். இருவருமே மதுரை பாடி லாங்குவேஜ், வட்டார வழக்கு, தோற்றம் என்று கதாபாத்திரத்தில் மாற அதிகம் மெனக்கெட வேண்டி இருந்ததாம். தேசிய விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று அமீருக்கு நன்கு தெரிந்ததோ என்னவோ பிரியாமணியை சொந்தமாக டப்பிங் பேச வைத்து தேசிய விருதையும் வாங்க வைத்தார்.

 கார்த்திக்கு அட்வைஸ்

கார்த்திக்கு அட்வைஸ்

முதலில் இருவரையும் வைத்து வசனங்கள் இல்லாத மாண்டேஜ் காட்சிகளைத்தான் அமீர் படம் பிடித்துள்ளார். முதன் முதலாக அவர்களை வைத்து எடுக்கப்பட்ட காட்சி என்றால்,”பேசாமல் நீ என் கூட படுத்து புள்ளைய குடுத்துடு” என்று வசனம் பேசும் காட்சிதானாம். அன்று 7, 8 என்று பல டேக்குகள் சென்றுவிட்டதாம். அன்று இரவு தாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருவரையும் அழைத்து நன்கு நடிக்கும்படி அட்வைஸ் செய்தாராம். அதன் பின்னர் பிரியாமணியை மட்டும் வெளியே போகச் சொல்லி இருக்கிறார்.

 மிரண்ட கார்த்தி

மிரண்ட கார்த்தி

பிரியாமணி வெளியே சென்றதும் அந்தப் பெண் நடிப்பில் மிரட்டி எடுக்கிறாள். கொஞ்சம் விட்டால் கூட உங்களை தூக்கி சாப்பிட்டுவிட்டு உங்களது கதாபாத்திரத்தை டம்மியாக்கி விடுவாள், பார்த்துக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்ய கார்த்தியோ பயத்தில் மிரண்டு போய்விட்டாராம். பிறகு ஒவ்வொரு காட்சியில் பிரியாமணியுடன் நடிக்கும்போதும் பயந்து பயந்துதான் நடித்திருக்கிறார். இவருடைய காட்சிகளாவது லந்து செய்து கொண்டு கலகலப்பாக இருக்கும். ஆனால் பிரியாமணியின் காட்சிகள் அனைத்துமே பெர்ஃபார்ம் செய்யக்கூடிய காட்சிகள். அப்பாவாக நடித்த பொன்வண்ணனிடம் அடி வாங்கும் போது கூட பொன்வண்ணனுக்கு பொய்யாக அடிக்க தெரியாது என்பதால் உண்மையாகவே ஏழு டேக்குகளில் ஏழு குடைகள் உடையும் அளவிற்கு அடித்து நடித்தாராம். பிரியாமணியும் அழுது கொண்டே அதில் நடித்ததாகவும் அதனால்தான் தேசிய விருது பிரியாமணிக்கு கிடைத்ததாகவும் கார்த்தி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.