உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக காரில் கடத்தி வரப்பட்ட ரூ.85 லட்சம் பறிமுதல் – 4 பேர் கைது..!

கர்நாடகாவில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக காரில் கடத்தி வரப்பட்ட 85 லட்சம் ரூபாய் பணத்தை சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கி பிடித்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த ஃபயாஜா கான், இம்ரான் கான் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன தணிக்கையில் ஈட்டுப்பட்டிருந்த போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் அதிவேகமாக சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் துரத்திச் சென்று காரை மடக்கி பிடித்து சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.