கடந்த அமர்வில் இந்திய சந்தைகள் சற்று சரிவில் முடிவடைந்தன. குறிப்பாக சென்செக்ஸ் 770 புள்ளிகள் சரிந்து, 58,767 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 216 புள்ளிகள் குறைந்து, 17,543 புள்ளிகளாகவும் இருந்தது.
குறிப்பாக கச்சா எண்ணெய் விலை கணிசமான சரிவினைக் கண்டிருந்தாலும், ஐடி பங்குகள், மெட்டல்ஸ், பார்மா, எஃப் எம் சி ஜி, ஆயில் & கேஸ், நிதித்துறை உள்ளிட்ட பங்குகள் சரிவில் காணப்பட்டன. இதன் காரணமாக சந்தையானது அழுத்தத்தில் காணப்பட்டது.
எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாக சற்று மேலாக தோன்றியுள்ளது. இது சற்று ஏற்றம் காண வழிவகுக்கலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய லெவல்கள்
பைவேட் சார்ட்டின் படி, நிஃப்டியின் முக்கிய சப்போர்ட் லெவல் 17,452 புள்ளிகளாகவும், அதனை தொடர்ந்து 17,342 புள்ளிகளாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 17,669 புள்ளிகள் மற்றும் 17,796 புள்ளிகளாகவும் கணித்துள்ளனர்.
பேங்க் நிஃப்டி
பேங்க் நிஃப்டி கடந்த அமர்வில் 235 புள்ளிகள் குறைந்து, 39,301 புள்ளிகளாகவும் இருந்தது. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் புல்லிஷ் கேண்டில் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளதால், இன்று தொடக்கத்தில் சந்தை ஏற்றத்தினை காணலாமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதன் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 38,847 புள்ளிகளாகவும், அதனை தொடர்ந்து 38,393 புள்ளிகளாகவும் கணித்துள்ளனர். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 39,711 புள்ளிகளாகவும், இதனை தொடர்ந்து 40,122 புள்ளிகளாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கால் & புட் ஆப்சன் டேட்டா
கால் ஆப்சன் டேட்டா மற்றும் புட் ஆப்சன் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இதில் ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது.
ஹை டெலிவரி பர்சேன்டேஜ்
ஹை டெலிவரி பர்சேன்டேஜ் கொண்ட பங்குகள், பொதுவாக முதலீட்டாளார்கள் அதிக ஆர்வம் காட்டும் பங்களாக உள்ளன. இதில் REC, எஸ்பிஐ லைஃப், அம்புஜா சிமெண்ட்ஸ், இன்ஃபோசிஸ்ம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், பவர் கிரிட் கார்ப், எல்டி, வோல்டாஸ், டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் உள்ளிட்ட சில பங்குகள் இன்று கவனிக்கப்பட வேண்டிய பங்குகளாக உள்ளன.
நீண்டகால நோக்கில் ஏற்றம் காண வாய்ப்பு
ஒரு பங்கின் விலை அதிகரிக்காமல் அதன் ஓபன் இன்ட்ரஸ்ட் அதிகரித்தால், அது நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம்.
பஜாஜ் பின்செர்வ், அசோக் லேலண்ட், ஜிஎம்ஆர் இன்ப்ராட்ரக்சர், டாடா கன்சியூமர் ப்ராடக்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், தீபக் நைட்ரேட், இந்தியா மார்ட், மதர்சன் உள்ளிட்ட பல பங்குகள் அடங்கும்.
ஷார்ட் பில்டப்
ஒரு பங்கின் ஓபன் இன்ட்ரஸ்ட்ரேட் அதிகரித்து, விலை குறைந்தால், இந்த பங்கு விலையானது குறுகிய காலத்தில் ஏற்றம் காணலாம்.
ரிலையன்ஸ் இண்ஸ்டஸ்ட்ரீஸ்
ஹிண்டால்கோ
வோல்டாஸ்
பெர்சிஸ்டன்ஸ்
நேஷனல் அலிமினியம்
எஸ்பிஐ லைஃப்
நிஃப்டி
ஏபிபி
டாபர்
டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ்
ஷார்ட் கவரிங்
இதே ஒரு பங்கின் ஓபன் இன்ட்ரஸ்ட்ரேட் குறையும்போது, பங்கின் விலை அதிகரித்தால் அது ஷார்ட் கவரிங் ஆகவும் இருக்கலாம். ஆக இது ஓபன் இன்ட்ரஸ்ட் ரேட்டினையும் கவனத்தில் கொள்வது நல்லது.
இந்த பட்டியலில்
குஜராத் கேஸ் லிமிடெட்
எஸ்கார்ட்ஸ்
கொரமண்டல் சிமெண்ட்
பெல்
பாலிகேப்
ஃபெடரல் வங்கி
டைட்டன்
நவீன் ப்ளோர்
ராம்கோ சிமெண்ட்
அப்பல்லோ டயர்ஸ் உள்ளிட்ட சில பங்குகள் அடங்கும்.
மொத்த ஒப்பந்தங்கள்
டோட்லா டெய்ரி, ரூட் மொபைல்ஸ், கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ, மஹிந்திரா லாகிஸ்டிக்ஸ், விஜயா டயனாஸ்டிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் இன்று கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளாக உள்ளன.
முதலீட்டாளர்கள் கூட்டம்
செப்டம்பர் 2 ஆன இன்று, டாடா கெமிகல்ஸ், சின் ஜீன் இண்டர்நேஷனல், மெட்ரோ பிராண்ட்ஸ், கிளாண்ட் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், சிசி பவர் அன்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூசன்ஸ், வோல்டாஸ், கே இ ஐ இண்டஸ்ட்ரீஸ், ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ், எதோஸ்,ஐஐஎஃப் எல் பைனான்ஸ், ஜிஆர் இன்ப்ராஜெக்ட்ஸ், கல்யான் ஜுவவ்வலர்ஸ், ஹின்ட்வேர் இன்னொவேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளன.
பங்கு செய்திகள்
அதானி எண்டர்பிரைசஸ், இன்ஃபொசிஸ், ரத்தன் இந்தியா பவர், அரபிந்தோ பார்மா, ராம்கோ சிஸ்டம்ஸ், எஸ் ஐ எஸ், ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் லிஸ்டில் உள்ளன.
அன்னிய முதலீடுகள்
செப்டம்பர் 1 நிலவரப்படி, என் எஸ் இ தரவுகளின் படி அன்னிய முதலீடானது 2290.31 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 951.13 கோடி ரூபாய் மதிப்பிலானபங்குகளை வாங்கியுள்ளனர்.
எஃப் & ஓ தடை
எஃப் & ஓ தடை பட்டியலில் எந்த பங்குகளும் இடம் பெறவில்லை. இன்றைய சந்தை அமர்வில் ஏதேனும் பங்குகள் இந்த தடை பட்டியலில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யப்படும். இந்த பங்குகள் மீண்டும் 80% கீழாக ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும் போது வர்த்தகத்திற்கு திரும்பும்.
Trade setup for Friday: important things to know before opening bell
Trade setup for Friday: important things to know before opening bell /இன்று பங்கு சந்தையின் போக்கு எப்படியிருக்கும்.. 10 கவனிக்க விஷயங்கள்.. கவனமா இருங்க!