சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியிருந்தால் வீட்டை புல்டோசரில் இடித்து தள்ளுங்கள்: மம்தா பானர்ஜி சவால்

கொல்கத்தா: எனது சொத்துகள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டிருப்பதாக நிரூபித் தால் அவற்றை புல்டோசர் மூலம் இடித்து தள்ளுங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா, அரசு நிலத்தை ஆக்கிர மித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மம்தா உறவினர்களின் சொத்து மதிப்பும் அதிவேகமாக உயர்ந்துள்ளது குறித்து மத்திய அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தவிர நிலக்கரி ஊழல் வழக்கில் மம்தாவின் மருமகனும் திரிணமூல் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கடந்த செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் அரசு நிலத்தை ஆக்கிரமித் துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காளிகாட் பகுதியில் உள்ள எனது வீடு குத்தகை நிலத்தில் உள்ளது. உண்மையில் அந்த நிலம் ராணி ராஷ்மோனியின் குடும்பத்துக்கு சொந்தமானது. குற்றச்சாட்டு குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால் எனது அனுமதியின்றி ஒட்டுமொத்த சொத்தையும் இடித்து அகற்றுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். எனது சொத்துகள் சட்டவிரோத மாக அல்லது தவறான வழிகளில் வாங்கப்பட்டிருப்பதாக யாராவது நிரூபித்தால் அவற்றை புல்டோசர் மூலம் இடித்து அகற்றலாம்.

எனது குடும்பத்துக்கு எதிராக நோட்டீஸ் வந்துள்ளது. இதைக்கண்டு நான் பயப்பட வில்லை. சட்டரீதியாக எதிர்த்து போராடுவேன். எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். ஒருவேளை நீதி கிடைக் காவிட்டாலும் மக்கள் இறுதி முடிவு எடுப்பார்கள். இத்தகைய மோசமான அரசியலை இதுவரை நான் பார்த்ததில்லை.

அவதூறு அரசியல், பொய்கள், அச்சிட முடியாத வார்த்தைகள், குறைந்தபட்ச மரியாதை கூட தராதது போன்றவற்றை நான் விரும்பவில்லை. மிரட்டல் அரசியலும் தொடங்கிவிட்டது. ஊடகத் துறையில் ஒரு பிரிவினர் ஆதாரமின்றி அவதூறு பரப்பு
கின்றனர்.

நாங்கள் கூட்டுக் குடும்பமாக வசிப்பதாக கூறுவோம். ஆனால் தனித்தனியாகத் தான் வசிக்கிறோம். எனக்கு சமைக்க நேரமில்லை. அபிஷேக்கின் தாயார் எனக்கு உணவு சமைத்து அனுப்புகிறார். அவரும் தனியாகத் தான் வசிக்கிறார். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.