ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா ஒரு ஹீரோவாக மாறிவிட்டார். பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். 4 ஓவர்கள் வீசிய அவர் 21 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதே போல் பேட்டிங்கில், 97/5 என்று இந்திய அணிக்கு ஆட்டம் நெருக்கடியான நிலைக்கு செல்ல பாண்டியாவின் இன்னிங்ஸ் அணியை வெற்றிப்பெற செய்தது. பேட்டிங்கில் அவர் 17 பந்துகளில் 33 ரன்களை விளாசினார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்டியாதான் அடுத்த கேப்டன் என்று கருதுகிறேன். தோனி மாதிரியான வீரராக பாண்டியா மாறிவிட்டார். அவர் மிக அமைதியாகவும் இருக்கிறார். நன்றாக பேட்டிங்கும் செய்கிறார் என்றார்.
மிகவும் கடினமாக உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார். அவர் இந்தியாவின் கேப்டனாவதை நான் எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போதும், ஐபிஎல் போட்டியின்போதும் அவர் தனது குணாம்சத்தை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.
இந்திய அணியின் கேப்டனாக இருப்பதற்கான அனைத்து தகுதிகளையும், திறன்களையும் அவர் பெற்றிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
newstm.in