இந்த நாட்டில் இன்று முதல் ரயில் பயணம் இலவசம்!!

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்பெயின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் முழுவதும், பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன.

எனினும் பயணிகளுக்கு வசதியாக, ரயில் பயணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி வழங்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் பொது ரயில் நெட்வொர்க்கான ரென்ஃபே மூலம் இயக்கப்படும் பல்வேறு ரயில்களில் பயணிகள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spain

ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதால் பல சிக்கல்களை நாடுகள் சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஸ்பெயினில் விலைவாசி உயர்வு, பண வீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செப்டம்பர் 1 முதல், நெட்வொர்க்கின் பொதுச் சேவைகளான ‘செர்கானியாஸ், ரோடலிஸ் மற்றும் மீடியா டிஸ்டண்சு’ மூலம் இயக்கப்படும் ரயில்களுக்கான பயண டிக்கெட்டுகள் இந்த ஆண்டு இறுதி வரை இலவசம்” என அறிவித்துள்ளார். இதில் நீண்ட தூரப் பயணங்களும் மற்றும் ஒற்றை பயண டிக்கெட்டுகளும் அடங்கும்.

Spain

ஏற்கெனவே, போக்குவரத்து கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. இதில் மெட்ரோக்கள், பேருந்துகள் மற்றும் டிராம்கள் அடங்கும். பயணிகள் சேவைகள் மற்றும் 300 கிமீக்கு குறைவான, நடுத்தர தூர வழிகளில் பல பயணங்களுக்கு இலவச ரயில் பயண திட்டம் பொருந்தும். ஸ்பானிஷ் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் முக்கியமாக இந்தத் திட்டத்தில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பல பயண ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் சுற்றுலாப் பயணிகளும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.