ஐடி நிறுவனங்களில் சமீபத்திய காலாண்டுகளாகவே அட்ரிஷன் விகிதமானது மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றது. இது ஐடி நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
குறிப்பாக ஐடி ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள அதிக செலவிடும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் பல நிறுவனங்களும் மார்ஜின் விகிதத்தில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களாக டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட ஐடி ஜாம்பவான்களும், இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன.
கிட்டதட்ட 2 மாத சரிவில் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?
பணியமர்த்தல் எப்படி?
மேற்கண்ட ஐடி ஜாம்பவான்கள் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஜுன் காலாண்டில் 50,000-க்கும் மேற்பட்ட பணியாளார்களை தனது நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளன.
அது தற்போதைய நிலவரம் தான் என்ன? முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது அட்ரிஷன் விகிதம் குறைந்துள்ளதா? இல்லையா? ஜுன் காலாண்டில் என்ன நிலவரம்? வாருங்கள் பார்க்கலாம்.
அட்ரிஷன் விகிதம்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது மற்ற ஐடி நிறுவனங்களை காட்டிலும் மிக அதிகம் எனலாம். இதன் முதல் காலாண்டு அட்ரிஷன் விகிதம் 28.4% ஆக உள்ளது.
இதே விப்ரோவின் அட்ரிஷன் விகிதம் 23.3% ஆக இருந்தது. இதே டெக் மகேந்திராவின் அட்ரிஷன் விகிதம் 22% ஆகவும் உள்ளது.
ஏன் அதிகரிப்பு?
சந்தையில் விரிவாக்கம் இருந்து வரும் நிலையில் அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ளதாக டெக் மகேந்திராவின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சிபி குர்னானி தெரிவித்துள்ளார். பொதுவாக ஒரு தொழிற்துறையான விரைவான முன்னேற்றத்தினை காணும்போது, அட்ரிஷன் விகிதம் 23 – 24% இருக்கலாம். ஆக சந்தையில் தற்போது அட்ரிஷன் விகிதம் குறையத் தொடங்கியுள்ளது என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
டிசிஎஸ் நிலவரம்?
டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது கடந்த காலாண்டினை காட்டிலும் 2.3% அதிகரித்து, 19.7% ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், காலாண்டு அறிக்கைக்கு பின்னர் அட்ரிஷன் விகிதம் குறையவில்லை. எனினும் இது மற்ற முன்னணி நிறுவனங்களை காட்டிலும் குறைவாகவே இருப்பதாகவும் கூறியுள்ளார். இரண்டாவது காலாண்டிலும் இந்த நிலை தொடரலாம் என்றும் கூறுகின்றார். எனினும் இனி வரும் காலாண்டுகளில் மெதுவாக குறையத் தொடங்கலாம் என கூறியுள்லார்.
ஏன் அடிக்கடி வேலை மாற்றம்?
ஐடி துறையில் ஊழியர்கள் ஏன் அடிக்கடி தங்களது வேலையினை மாற்றம் செய்கிறார்கள். மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது ஏன் ஐடி துறையில் மட்டும் அட்ரிஷன் விகிதம் அதிகமாக உள்ளது.
இது குறித்து ஊழியர்கள் தரப்பில் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் நீண்டகாலத்திற்கு இருந்தால் வளர்ச்சி குறைவாக இருக்கலாம். ஒரு சிறந்த இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி பாதை முன்பு இருந்ததை போல இல்லை. சந்தையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. ஆக ஊழியர்கள் அதற்கேற்ப அடிக்கடி வேலையினை மாற்றுகின்றனர்.
அதிக சம்பளம்
மற்றொரு ஊழியர், ஊழியர்கள் வேறொரு நிறுவனத்திற்கு மாறுகின்றார் எனில், அதற்கு காரணம் அதிக சம்பளமும் ஒன்று. ஆக இதுவும் அட்ரிஷன் விகிதம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
ஐபிஎம், கேப்ஜெமினி, அசெஞ்சர் உள்ளிட்ட சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள், மற்ற நிறுவனங்களை காட்டிலும் அதிக சம்பளம் கொடுக்கின்றன. இதனால் பலரும் அதிக சம்பளத்திற்காக வேலையினை விட்டு விடுகின்றனர். இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும்போது பலரும் வேலையினை விட்டுவிடுகின்றனர்.
இன்ஃபோசிஸ் முன்னாள் இயக்குனர் கருத்து
இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் மோகன்தாஸ் பாய், ஐடி துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு தேவைக்கு அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பெரிய பெரிய நிறுவனங்களில் சேர்ந்து தங்களது கேரியரை மேம்படுத்த விரும்புகின்றனர். பயிற்சி பெற விரும்புகின்றனர்.
Why infosys, Tech mahindra, TCS and other IT companies facing high attrition rates?
Why infosys, Tech mahindra, TCS and other IT companies facing high attrition rates?/ஐடி ஊழியர்கள் எடுக்கும் அதிரடி முடிவு.. அட்ரிஷன் அதிகரிக்க இது தான் காரணமா?