அயர்ன் மேன் படம் பார்க்கும்போதெல்லாம் தோன்றும். மனுச எந்த கடைல கண்ணாடி வாங்குறார்னு கேட்டு அந்த கண்ணாடியை வாங்கி போட்டுடனும். அந்த கண்ணாடிலதா நம்ம என்ன பாக்கணும்னு நெனைக்குறோமோ அதெல்லாம் காட்டுது அப்டினு தோனிருக்கும்.
ஆனால் அது போன்ற கண்ணாடிகள் சுலபமாக லெனோவா தளத்திலேயே கிடைக்கும் என்று யாரவது சொன்னால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். அப்படியென்றால் நன்றாக சந்தோச பட்டு கொள்ளுங்கள். லெனோவா அவர்களின் அடுத்த நிலை ஸ்மார்ட் கண்ணாடியை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக அலுவலக பணிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிகளில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பனவற்றை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
லெனோவா க்ளாஸஸ் டி1 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் உங்கள் அலுவலக பணிகளில் ஒரு புதிய மெய்நிகர்(virtual) உலகத்திற்க்கே அழைத்து செல்லும். இதில் உள்ள பிரத்யேக டிஸ்பிளே அமைப்புகள் உங்களின் வேலையை சுலபமாக்கும். தூரத்தில் தெரியும் டிஸ்பிளேவை உங்கள் கண்முன் நீங்கள் மட்டும் பார்க்கும் படி செய்யும்.
இதை சாதாரணமாக உங்கள் மொபைல் டிவைஸ் அல்லது சிஸ்டேமோடு பொருத்தி நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் இரண்டு மைக்ரோ OLED டிஸ்பிளே உள்ளது. ஒவ்வொரு மைக்ரோ டிஸ்பிளேயும் 1,080×1,920 பிக்ஸல் கொண்டவை. மேலும் 60Hz ரெஃப்ரெஷிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.
இவை குறைந்த நீலக்கதிர்களை வெளியிடுபவை என சான்றிதழ் பெற்றவை. இதில் ஆடியோ வசதியும் உள்ளதால் மீட்டிங், படங்கள் பார்க்க என பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இதோடு மற்ற ஏர்பட்ஸ் , ஹெட்போன்ஸ் போன்றவற்றையும் இணைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இது ட்ரான்ஸ்பரண்ட் கண்ணாடியாக இருப்பதால் எப்போதும் உங்கள் சுற்றுப்புறத்தில் நீங்கள் ஒரு கண்ணை வைத்து கொள்ள முடியும். இந்த கண்ணாடிகளை உங்களின் முகத்தோற்றத்திற்கு ஏற்றவாறு உங்களுக்கு வேண்டிய டிசைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை. 2023க்குள் இந்தியாவில் விற்பனையாகலாம் என்று சொல்லப்படுகிறது.
– சுபாஷ் சந்திரபோஸ்