இந்தியர் கைக்கு வரும் மற்றொரு அமெரிக்க நிறுவனம் ‘ஸ்டார்பக்ஸ்’..!

அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்களுக்கு இந்தியர்கள் சிஇஓ-வாக இருக்கும் வேளையில் தற்போது புதிதாக ஒரு மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியம் இந்தியர் கைகளுக்கு வந்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களின் நிர்வாகத் திறன் மீது அதிகளவிலான நம்பிக்கை வைத்திருக்கும் காரணத்தாலும், அதை இந்தியர்கள் பல முறை நிரூபித்துக் காட்டுவதாலும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் இந்தியர்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு ரஷ்யா உட்பட உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Reckitt Benckiser சிஇஓ

சர்வேதேச நுகர்வோர் பொருட்கள் விற்பனை நிறுவனமான Reckitt Benckiser வியாழக்கிழமை அன்று அதன் தலைமை செயல் அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மன் மூன்று ஆண்டுப் பதவிக் காலத்திற்குப் பிறகு செப்டம்பர் இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்து.

அமெரிக்கா

அமெரிக்கா

இது இத்துறையில் இருக்கும் பலருக்கு அதிர்ச்சி அளித்தாலும் லக்ஷ்மன் நரசிம்மன் அமெரிக்காவில் புதிய வாய்ப்புகளுக்காகத் தான் பதவியை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார், பலரும் Reckitt Benckiser இயக்கும் இதே துறை சார்ந்த நிறுவனத்தில் தான் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது செம டிவிஸ்ட் கொடுத்துள்ளார் லக்ஷ்மன் நரசிம்மன்.

புதிய ஸ்டார்பக்ஸ் சிஇஓ
 

புதிய ஸ்டார்பக்ஸ் சிஇஓ

அமெரிக்க நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் இந்தியர்கள் பட்டியலில் லக்ஷ்மன் நரசிம்மன் இணைந்துள்ளார், அக்டோபர் 1 முதல் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாகத் தனது பணியைத் துவங்க உள்ளார். இதேபோல் ஏப்ரல் 1, 2023ல் லக்ஷ்மன் நரசிம்மன் ஸ்டார்பக்ஸ் நிர்வாகக் குழுவில் சேர உள்ளார்.

நிர்வாகக் குழுவில் இடம்

நிர்வாகக் குழுவில் இடம்

லக்ஷ்மன் நரசிம்மன் முதல் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இன்கமிங் சிஇஓ-வாகச் சேர உள்ளார், லண்டனில் இருந்து சியாட்டில்-க்கு மாறிய பின்னர்த் தற்போது ஸ்டார்பக்ஸ்-ன் இடைக்காலச் சிஇஓ-வாக இருக்கும்
ஹோவர்ட் ஷூல்ட்ஸ் உடன் இணைந்து பணியாற்றிய பின்பு சிஇஓ மற்றும் நிர்வாகக் குழுவில் சேர உள்ளார்.

30 வருட அனுபவம்

30 வருட அனுபவம்

லக்ஷ்மன் நரசிம்மன்-க்கு சர்வதேச சந்தை வர்த்தகத்தில் சுமார் 30 வருட பணி அனுபவம் உள்ளது, இதனால் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் மேம்படுத்தவும் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Starbucks appoints Indian-origin Laxman Narasimhan as new CEO; Joined league of global Indian CEOs

Starbucks appoints Indian-origin Laxman Narasimhan as new CEO; Joined league of global Indian CEOs இந்தியர் கைக்கு வரும் மற்றொரு அமெரிக்க நிறுவனம் ‘ஸ்டார்பக்ஸ்’..!

Story first published: Friday, September 2, 2022, 10:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.