மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான படம் ‘ராவணன்’. விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரியாமணி, பிரபு, பிருத்விராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது ஆகும். பாடலின் இசையும், வரிகளும் எப்படி ரசிகர்களை கவர்ந்ததோ அதேபோல் அந்தப் பாடலை பாடியவரின் குரலும் வெகுவாக கவர்ந்தது.
இந்தப் பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா. இந்தப் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான எந்திரன் 2.0 படத்தில் ‘புள்ளினங்காள்’ பாடலை பாடினார். இந்தப் பாடலை மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதியிருந்தார். இந்தப் பாடலும் ரசிகர்களை பலமாக கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து சர்கார் படத்தில் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தில் ‘காலமே’, என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாக்யா பாடியுள்ளார்.
RIP #BambaBakya sir. He’s known for his beautiful and unique voice. #Simtaangaran and #Kaalame will always be special. Deepest condolences to his closed and dear ones! #RIPBambaBakya pic.twitter.com/sck5WyD5iM
— Mersal Saravanan (@MersalSaravanan) September 2, 2022
அதேபோல், சந்தோஷ் தயாநிதி இசையமைத்த ராட்டி என்ற ஆல்பத்தில் “எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…” என்ற பாடல் மிக பிரபலம் ஆனது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் ஒரு பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார்.
This song. His voice.
Even those first few seconds of #PonniNadhi were pure goosebumps.RIP #BambaBakya https://t.co/zjMoeIeqGy
— Ashmitha (@ashmitha_sk) September 2, 2022
பல ஹிட் பாடல்களை கொடுத்ததால் கோலிவுட்டில் மிகப்பெரிய பாடகராக பம்பா பாக்யா வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 49. பாக்யாவின் திடீர் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள், அவரது நண்பர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.