அரசு பள்ளிகளில் பதினோராம் வகுப்புகளில் தொழில்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகளில் தொழில்கல்வி பாடப்பிரிவுகளை மூட வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பதினோராம் வகுப்புகளில் தொழில்கல்வி பாடப்பிரிவுகளை உடனடியாக மூட வேண்டும். ஏற்கனவே அப்பிரிவுகளில் மாணவர்களை சேர்த்திருந்தால் அந்த மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழில்கல்வி பாடப்பிரிவுகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவு மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் இந்த முடிவு ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.