சென்னை : நடிகர் விஜய் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் மும்முரமாக கலந்துக் கொண்டுள்ளார் விஜய்.
விஜய் என்றாலே டெடிகேஷன்தான். தான் கமிட்டான படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுதான் தன்னுடைய மற்ற விஷயங்கள் குறித்து யோசிப்பார் விஜய்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தன்னுடைய 66வது படமான வாரிசு படத்தில் கமிட்டாகி சிறப்பாக நடித்து வருகிறார். படம் ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை என அடுத்தடுத்த இடங்கில் சூட்டிங் நடத்தப்பட்டு ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விஜய் என்றாலே டெடிகேஷன்
விஜய் என்றாலே டெடிகேஷன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். தான் எடுத்துக் கொள்ளும் படங்களின் வெற்றிக்காக, அதன் கதைக்களத்திற்காக, காட்சி அமைப்புகளுக்காக 100 சதவிகிதம் மெனக்கெடுவார். தான் மட்டுமின்றி சக நடிகர்களும் சிறப்பாக நடிக்க ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவார். இதை மற்ற நடிகர்கள் சொல்ல நாம் கேட்டதுண்டு.
மெச்சூரிட்டியை கொடுத்த நெகட்டிவ் விமர்சனங்கள்
இந்தப் பண்புகள் அவருக்கு இயல்பிலேயே அமைந்திருந்தாலும், தன்னுடைய கேரியரின் துவக்கத்தில் தான் கண்ட நெகட்டிவ் விமர்சனங்களும் இவருக்கு இந்த மெச்சூரிட்டியை வழங்கியுள்ளது என்று கூறலாம். இவருக்கு சிறப்பாக அமைந்தது பூவே உனக்காக படம்தான். ஆனால் இவருடைய அறிமுகப்படமான நாளைய தீர்ப்பு படத்திற்காக இவர் எப்படி தயாரானார் தெரியுமா.
விஜய்யை பீச்சுக்கு இழுத்துட்டு போவேன்
இதுகுறித்து ஹிட் லிஸ்ட் படத்தின் பூஜையில் பங்கேற்ற இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏசி மனம் திறந்துள்ளார். விஜய் நடிக்க விரும்பியபோது அதற்காக 6 மாதங்கள் அவரை தயார் செய்ததாக அவர் கூறியுள்ளார். அந்த 6 மாதங்களும் தினந்தோறும் காலை 4 மணிக்கு விஜய்யை எழுப்பி பீச்சுக்கு இழுத்துக் கொண்டு போவேன் என்று அவர் கூறியுள்ளார்.
2 மணிநேரம் ஹெவி பிராக்டீஸ்
அங்கு சென்று குதிரையேற்றம் உள்ளிட்டவற்றிற்கு அவருக்கு பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளித்ததாகவும் குதிரையில் இருந்து பீச்சில் குதி என்றதும் உடனடியாக அவர் அதை டெடிகேஷனுடன் செய்வார் என்றும் எஸ்ஏசி குறிப்பிட்டுள்ளார். இந்த டெடிகேஷன்தான் அவரது வெற்றிக்கு காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்கு காரணம்
எந்த நடிகனும் சினிமாவிற்கு வருவதற்கும் முன்பு தன்னை சிறந்த பயிற்சிக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும். தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு சினிமாவில் நுழைந்தால் வெற்றி உறுதி. முதல் படம் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து சினிமாவில் நிலைக்க இந்த திறமைகளே உதவும் என்றும் எஸ்ஏசி கூறியுள்ளார்.