திருப்பூர்: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் ஆட்சியர் முகாம் அலுவலக பகுதியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சூளூர், பண்ருட்டி, ராசிபுரத்தில் தலா 7 செ.மீ. மழையும், அவிநாசி, பரமத்திவேலூரில் தலா 6 செ.மீ., பெருந்துறையில் தலா 5 செ.மீ., உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.