எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்காலிக நிம்மதி அளித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!! அஇஅதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கு இன்று தீர்ப்புக்காக நீதி அரசர்கள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் முன்பாக தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்கள்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதி மன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
இது குறித்து இபிஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
– இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
– அதிமுக பொது குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமரவு உத்தரவிட்டுள்ளது
– அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தரம்மோகன், அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது
– தனி நீதிபதி உத்தரவு ரத்தானதால் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும்.