இனி ஓ. பன்னீர்செல்வத்துக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை -ஜெயக்குமார் ஆருடம்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்துள்ள நிலையில், சென்னை பசுமைவழிச் சாலை உள்ள அவரது இல்லத்தின் முன்பு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, ஜெயக்குமார் வளர்மதி ஆகியோ தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது. அதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam) பொதுக்குழு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இனி அரசியலில் ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ தான் எனக் கூறினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து ஜெயக்குமார் பேசியது:

– பொதுக்குழு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. 

– இந்த தீர்ப்பை தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். 

– இந்தத் தீர்ப்பின் மூலம் அதிமுகவில் ஒற்றை தலைமை தான் வேண்டுமென்பது உறுதியாகியுள்ளது. 

-அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது. 

– அதிமுக பொதுக்குழு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. 

– உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லும்.

– இனி அரசியலில் ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ தான். 

– எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்பதை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

மேலும் ஓ. பன்னீர்செல்வம் (O Panneerselvam) தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு செய்தால் அதை சட்டரீதியாக சட்ட வல்லுனர்களுடன் சந்திப்போம் என்றும் கூறினார். 

முன்னதாக இன்று, அதிமுக பொதுக்குழு (AIADMK General Council) தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் அவருக்கு சாதகமாக சென்னை  உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி இல்லம் முன்பாக குவிந்திருந்த அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தனர். எடப்பாடி பழனிச்சாமியை நிரந்தர பொது செயலாளர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என கோஷங்கள் எழுப்பிய அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறிக் கொண்டும் ஊட்டிக்கொண்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்கள் அடங்கிய பேனர்களுக்கு மலர் தூவி, பால் அபிஷேகம் செய்தனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.