ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனம் அதன் பயணிகள் மற்றும் கார்கே சேவைகளை வழங்கி வரும் 800 விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இது அதன் விமானிகள் போராட்டத்தினை அறிவித்த நிலையில் இந்த ரத்து அறிவிப்பானது வந்துள்ளது.
குறிப்பாக அதன் இரண்டு பெரிய மையங்களான பிராங்போர்ட் மற்றும் முனிச் ஆகியவற்றிலிருந்து விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று அது அறிவித்துள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு எதிராக ஒன்று சேரும் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்..!
ஊதிய உயர்வு கோரிக்கை
லுப்தான்சா விமானிகள் தொழிற்சங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்ட ஊதிய உயர்வினை, விமான சேவை நிர்வாகம் மறுக்கவே இந்த போராட்டம் எழுந்துள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று இது குறித்த பேச்சு வார்த்தையின்போது சுமூக நிலை எட்டப்படாத நிலையில் வெளி நடப்பு செய்வதாகவும் கூறியது குறிப்பிடத்தகக்து. இதற்கிடையில் தான் லுப்தான்சாவின் இந்த விமான ரத்து செய்தி வந்துள்ளது.
பயணிகளுக்கு பாதிப்பு
விடுமுறை காலக்கட்டத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ள நிலையில், இது பல ஆயிரம் பயணிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஊழியர்களின் போராட்டத்தை தடுக்க அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும், இதற்காக நிர்வாகம் ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
எங்களுக்கு வேறு வழியில்லை
எனினும் வார இறுதியில் ஆன இந்த ரத்து தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால் தமாதம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என லுப்தான்சா விளக்கம் அளித்துள்ளது.
லுப்தான்சா ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் நிறுவனம் தவிர்த்ததாக குற்றம் சாட்டும் ஊழியர்கள் சங்கம், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தவிர எங்குகளுக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவுத்துள்ளது.
பயணிகள் அதிருப்தி
ஊழியர் சங்கம் இந்த ஆண்டு 5.5% அதிகரிப்பும், 2023ல் இருந்து பணவீக்கத்திற்கு மேலாக தானாக அதிகரிக்கவும் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த மாதம் லுப்தான்சா ஊழியர்கள் பலரும் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல லட்சம் பயணிகள் அப்போதே பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்றதொரு அறிவிப்பு வந்துள்ளது. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.
German’s Lufthansa cancels 800 flights on Friday due to pilots strike
German’s Lufthansa cancels 800 flights on Friday due to pilots strike/விமானிகளின் அதிரடி முடிவு.. 800 விமானங்களை ரத்து செய்த லுப்தான்சா.. ஏன்?