விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் சட்டவிரோதமாக ஆன்லைனில் கசிந்தது
சென்னை : சீயான் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் சட்டவிரோதமாக ஆன்லைனில் கசிந்துள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் கோப்ரா.
படம் வெளியான முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. ஆனால், மோசமான திரைக்கதையால் கோப்ரா படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
கோப்ரா
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் கோப்ரா. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
பெரிய ஓபனிங்
லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31ந்தேதி உலகம் முழுவதும் 1300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 14 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இது விக்ரம் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய ஓப்பனிங் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வசூல் அதிகரிக்கும்
கோப்ரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி முதல் நாள் வசூல் 25கோடியை வசூலித்துள்ளது. ஆனால் இரண்டாவது நாளில் இது பாதியாக குறைந்து உலகம் முழுவதும் 14 கோடிகள் மட்டுமே வசூலித்துள்ளது. அடுத்து வார இறுதிநாட்கள் என்பதால், படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடப்பாவிகளா ?
இந்நிலையில், கோப்ரா திரைப்படம் சட்டவிரோதமாக திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகி உள்ளது. தகவல்களின்படி, தமிழ்ராக்கர்ஸ், டெலிகிராம், ஃபிலிம்ஜில்லா மற்றும் மூவிருல்ஸ் உள்ளிட்ட கிட்டத்தட்ட நான்கு இணையதளங்களில் லீக்காகி உள்ளது. படம் வெளியாகி முழுசா 3 நாள் கூட ஆகவில்லை அதற்குள் இணையத்தில் விக்ரமின் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.