16 வயதில் கஞ்சா புகையை சுவாசித்த சிறுவன் தட்டுத் தடுமாறி பேருந்து நிலையத்தை சுற்றி வந்த காட்சிகள் பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பட்டி தொட்டியெல்லாம் இன்றும் கஞ்சா எளிதாக கிடைக்கிறது. முன்பெல்லாம் 25-க்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் பயன்படுத்திய கஞ்சா, இன்று 16 வயது சிறுவர்கள் கஞ்சா புகைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் 16 வயது சிறுவன் தன்னையே உணராமல் தள்ளாடி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் இச்சிறுவனுக்கு என்ன ஆனது என்பதை உற்று நோக்கிய நிலையில், அவர் கஞ்சா போதையில் சுற்றித் திரிகிறாரா என்ற சந்தேகம் வலுக்கத் துவங்கியது.
இதையடுத்து சிறுவனின் செயலை கடந்த சிலமணி நேரமாக நோட்டமிட்ட அப்பகுதி பொதுமக்களிடம் சிறுவன் கஞ்சா போதையில் உளறியது தெரியவந்தது. இந்த நிலையில் சங்கராபுரம் போலீசார் உதவியுடன் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM