ரணிலின் வரவு செலவுத் திட்டம்! வாக்கெடுப்பை தவிர்க்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள்


2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்திற்கான வாக்களிப்பில் இருந்து விலகியிருக்க பல அரசியல் தரப்பினர் இன்று  தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பதைத் தவிர்ப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. 

அந்தக் கட்சியின்  பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் விலகியிருக்க தீர்மானம்

ரணிலின் வரவு செலவுத் திட்டம்! வாக்கெடுப்பை தவிர்க்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் | Interim Budget Sri Lanka Today Parliament

அத்துடன்,  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றையதினம்  வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளனர்.

2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு தானும்,  டலஸ் அழகப்பெருமவும் உள்ளிட்ட  பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் குழு வாக்களிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கான விவாதம் கடந்த 2 நாட்களாக  முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.