தீர்ப்பு இருக்கட்டும்… நியாயம் யார் பக்கம்? தங்கமணி சொன்ன சூப்பர் தகவல்!

ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லுமா? செல்லாதா? என ரத்தத்தின் ரத்தங்கள் தலையில் போட்டு குழப்பி கொண்டிருக்கையில் நீதிமன்றமும் தனது பங்கிற்கு வேலையை காட்டிவிட்டது. முதல் முறை ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாகவும், இரண்டாவது முறை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்து உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக

தெரிவித்துள்ளார். இதனால் விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெளிவாக தெரிகிறது. இதற்கிடையில் கொண்டாட்டங்களை தவிர்க்க முடியவில்லை. எடப்பாடிக்கு ஆதரவாக மாவட்டந்தோறும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அப்பகுதியில் இருந்த கடைகள், அந்த வழியாக சென்றவர்கள், பேருந்தில், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் என பலருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும். இன்றைய தீர்ப்பு நியாயத்திற்கு கிடைத்த தீர்ப்பு. திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சித் தலைவர்

அவர்கள் தான். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஏற்றுக் கொண்டதை இன்றைய தினம் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

வருங்காலத்தில் தமிழகத்தின் முதல்வராக, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தான் வருவிருக்கிறார். இன்று கிடைத்த வெற்றி மிகப்பெரிய வெற்றி. ஒன்றரை கோடி தொண்டர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அடுத்து பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும். மூன்று மாதங்களுக்குள் அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்படும்.

நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார். எத்தனை முறை மேல்முறையீடு செய்தாலும் நியாயம் தான் வெல்லும். ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று அமமுகவில் சேர்ந்தவர்கள் தான் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சேர்ந்திருக்கின்றனர். அதிமுகவில் இருந்து ஒருவர் கூட அவர் பக்கம் செல்லவில்லை. எல்லோரும் ஒருமனதாக அண்ணன் எடப்பாடியாரை ஏற்றுக் கொண்டிருப்பதாக தங்கமணி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.