“போலாந்தை ஏன் ஆக்கிரமிக்கப் பார்க்கிறீர்கள்?" – இனவெறியில் இந்தியரை திட்டிய அமெரிக்கப் பயணி

போலந்து நாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர், தன் தேவைக்காக வெளியே வந்திருக்கிறார். அப்போது போலாந்து வந்திருந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், அந்த இந்தியரை நோக்கி திட்டியபடி தன் செல்போனில் வீடியோ எடுக்கிறார். மேலும், அந்த இந்தியரை இனவெறி காரணமாக மிக மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்.

இந்தியர்

இது தொடர்பாக வைரலாகப் பகிரப்படும் வீடியோவில் அந்த நபர் இந்தியரை நோக்கி, “நீங்கள் ஏன் போலந்தில் இருக்கிறீர்கள்? அமெரிக்காவிலும் உங்களில் நிறைய பேர் இருக்கிறீர்கள். நீங்கள் போலந்தை ஆக்கிரமிக்க நினைக்கிறீர்களா? நீங்கள் ஏன் உங்கள் சொந்த நாடான இந்தியாவுக்குத் திரும்பக் கூடாது? எங்கள் நாட்டில் இருக்க உங்களுக்கு உரிமை இருப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள் என்பதை விளக்க முடியுமா? உங்கள் மக்கள் ஏன் எங்கள் தாயகத்தை ஆக்கிரமிக்கிறார்கள்? உங்களிடம் இந்தியா இருக்கிறது! நீ ஏன் வெள்ளைக்காரன் நிலத்துக்கு வருகிறாய்… வெள்ளையனின் கடின உழைப்பால்தான், வெளிநாட்டிலுள்ள இந்தியர்கள் வாழ்கிறீர்கள்.

இந்தியர்களாகிய நீங்கள்தான் உங்கள் நாட்டை உருவாக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நீங்கள் ஏன் ஒட்டுண்ணியாக இருக்கிறீர்கள்? எங்கள் இனத்தை இனப்படுகொலை செய்கிறீர்கள். நீங்களெல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள்… படையெடுப்பாளர்கள்… உங்கள் நாட்டுக்கே செல்லுங்கள். நீங்கள் ஐரோப்பாவில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை” எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஒருகட்டத்தில், பதிலளிக்காத இந்தியரை ஆபாசமாக திட்டுவது போல வீடியோ முடிகிறது.

அமெரிக்கர்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நான்கு அமெரிக்க வாழ் இந்தியப் பெண்களை இனரீதியில் அவதூறாகப் பேசிய மெக்சிகன் பெண் கைதுசெய்யப்பட்டார். அந்தச் சம்பவம் இந்தியர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், அதே போன்ற சம்பவம் இப்போது மீண்டும் நடந்திருப்பது வெளிநாட்டுவாழ் இந்தியர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.